Thursday, January 28, 2010

16 டி (நம்பர்) வீடு

16 டி (நம்பர்) வீடு

எங்கள் ரயில்வேகாலனியில் எனக்கு அமைந்த வேலைக்காரி
எர்ரம்மா. “எர்ர” என்ற வார்த்தை சிகப்பு என்று தெலுங்கில்
அர்த்தம், பார்வதம்மா பெயர் என்றும் ஆதி சக்தியின்பெயர்
தனக்கு அமைந்ததாகவும் எர்ரம்மா சொல்லிக்கொள்வாள்,

பார்க்க கறூப்பு என்றாலும் உள்ளம் அவளூக்கு என்னை
போல் வெள்ளை(அசடு) ,விசாகப்பட்டினத்தில் முதன்முதலாக
நாங்கள் காலனிக்கு வந்தபோது அமைந்தவள்,அப்போது
எனக்கு குழந்தைகள் கிடையாது,என்னோட தெலுங்கு டீச்சர்
எர்ரம்மாதான், நாங்கள்முதலில் வேலக்காரி வேண்டாம் என்றே
இருந்தோம், ஊர் புதுசு பாஷை வேறு ப்ராப்ளம்,

எதிர் வீட்டில் வேலை செய்யும் எர்ரம்மா என்னைபார்க்கும்
போதெல்லாம் இப்படி “இளைச்சுல்ல போயீருச்சு” வேலைக்காரி
இல்லாம வேலை செஞ்சுகிட்டு என்பாள்,அவள் பேசுவதிலிருந்து
நானாக தெரிந்து கொண்டேன், அவளுக்கு அவள் சம்பாத்தியத்தை
அதிகப்படுத்த அப்படி சொல்கிறாள் என்று தெரிந்து வேலைக்கு
வைத்துக்கொண்டேன், மாதம் அஞ்சு ரூபாய், எங்கள் வீட்டு
பட்ஜெட் நாங்கள் மூவரும் சேர்ந்துதான் போடுவோம், மாமனார்
அனுபவம் உள்ளவர், அவரிடம்தான் எங்காத்துக்காரர் மாத வரும்படியை
கொடுப்பார், அஞ்சு ரூபாயைத்தவிர எர்ரம்மாக்கு வேறு உதவி
கிடைக்காது தவிப்பாள், கடனாகக்கூட கொடுக்க மாட்டார் என்
மாமனார். வயசான காலத்துல புண்யமில்லாம போயிடும் என்று
அவரிடம் கூறுவாள், முனகிக்கொண்டே வேலை முடிப்பாள்..

நாங்கள் குடிவந்த அந்தவீடு நாங்கள் வருவதற்கு முன்னால்
4 பேர் மாறீவிட்டார்கள் குடிவந்த கொஞ்சநாளிலேயே
தெரிந்தாலும் காரணம் தெரியாது, எங்காத்துக்காரர் ஷிப்ட் டூட்டி
இரவு 2 மணிக்கு செல்வார் காலை மணிபாராது வருவார்,
எப்ப வேணுமானாலும் டூட்டி செல்வார்,உழைப்பு கடினமான
வேலைஅப்போது அவருக்கு,, எனக்கு ரேடியோ துணை
எர்ரம்மா பேச்சு பொழுதுபோகும்,

நாங்கள் இருந்த வீட்டில் ஒருவர் தூக்குப்போட்டுக்கொண்டு
உயிர் விட்டதாக எர்ரம்மா சொன்னாள், என் மாமனார் கடன்
கொடுக்க மறுக்கிறார் என்பதற்க்காக அவள் பொய்
சொல்றாள் என்றே நினைத்தேன், ஆனால் எல்லாருமே
என்னிடமும் என்மாமனாரிடமும் உங்களுக்கு எந்தவிதமான
பயமும் தோணவில்லைய்யா என்று கேட்பார்கள், பேயாவது
பிசாசாவதுவேறு வேலையில்லைஉங்களுக்குஎன்பார் என் மாமனார்.
நான் தூங்கப்போகும்போது தினமும் வீபூதி நெற்றியிலிட்டுகொள்வேன்..

என்னோட முகத்துக்கு நேராககாஞ்சிசுவமிகள்(பெரியவாள்) படத்தை
மாட்டி வைத்து கொள்வேன், எர்ரம்மா.சொன்னபிற்பாடு எனக்கு
என் தலை மாட்டில் வெள்ளை புடவைகட்டி தலை விரித்துக்கொண்டு
ஒரு உருவம் நிற்கிறார்ப்போல் ப்ரமை, என்மாமனாரை இரவு
எழுப்பி சொல்வேன், சதங்கை சத்தம் வேற கேக்கறாப்பல் இருக்கே
என்பார்.. என் பயத்தை அதிகமாக்கிவிடுவார், எர்ரம்மா.பேய்க்கதை
சொன்னதுக்க்குஅப்புறம் நிகழ்ந்தவை இந்த தோற்றங்கள், மூன்றுவருடம்
குடி இருந்தோம் அந்த வீட்டில், நாங்கள் காலனியில் வேறு வீட்டுக்கு
சென்றபின்பு நாங்கள் குடி இருந்த இந்த வீட்டுக்கு குடிவந்தவர்களெல்லாம்
எங்களை மூணு வருஷம் எப்படி இந்த பேய்வீட்டில் குடி இருந்தீர்கள்
என்று?,கேட்ப்பார்கள். எனக்கே கேள்விக்குறிதான் இன்றுவரை.
16 டி நம்பர் குவார்ட்டர் மறக்கமுடியாத வீடு

Saturday, January 23, 2010

இயற்கையின் ஆசாரம் இன்று ஹோட்டல் கலாசாரம்

இயற்கையின் ஆசாரம் இன்று ஹோட்டல் கலாசாரம்

சமீபத்தில் ஒரு சானலில் பைஃவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு மாமி
அவர்களுடன் ஒரு 25 வயது மதிக்கதக்க பெண் இருவரும் வடை
பஜ்ஜி மற்றும் சூடான அடை இன்னும் நிறைய நம்மோட சம்ப்ரதாயமான
உணவு வகைககள் அப்ப அப்ப செய்து கொடுத்து சர்வீஸ் செய்து
ஹோட்டலுக்கு வருபவரை மகிழ்ச்சிகொள்ளசெய்து கொண்டுஇருந்தனர்.

தரையில் அமர்ந்து அடுப்பு வைத்துக்கொண்டு வீட்டுசூழ்நிலை உண்டாக்கி
பதார்த்த்ங்களை இலையில் பரிமாறி என்று,நம் சென்னையில் ஒரு ஹோட்டலில்
தான்,வித்யாசமாகவும் வேடிக்கையாகவும் அந்தநிகழ்ச்சி இருந்தது,

வாசலில் கோலம் போட்டுக்கொண்டு , மடிசார் கட்டு, அய்யங்கார்கட்டு
தலைஅலங்காரம்,நவராத்திரி கொண்டாட்டம்,சுண்டல்வகைகள், மேலும்
கிராமப்பிண்ணனி இசை அவர்களின் புடவை அணியும் முறை என்று
ஹோட்டலில் காண்பித்து காசாக்கிக்கொண்டு இருந்தனர், விளக்கு
வகைகள்,மலையாள விளக்கு,அன்னவிளக்கு, மண்விளக்கு,ராஜஸ்தான்
வகை என்று வைத்து அழ்குசெய்து அசத்திகொண்டு இருந்தனர்,

பாஃரின் பெண்களுக்கு புடவை அலங்காரம்,நம்மூர் பெண்கள் டூபீஸ்
பாஃரின் பெண்கள் மடிசார், ம்ம்ம்ம்ம் என்னத்தைச்சொல்ல, காசாகி
கொண்டு இருக்கும் நம்மோட பண்பாடு, நாமே அதை பின்பற்ற
முயற்சிக்காத போது பாஃரின்க்காராளுக்கு இவர்கள் அதன் அர்த்தத்தை
சொல்லவில்லை அனர்த்தம் செய்து கொண்டு இருந்தனர்,

கும்பகோணம்கிட்ட ஒரு ஊர்வழியே சென்றபோது மண்வீடுகள்
செம்மண் இட்டு வாசல்ல கோலம் போட்டு வாழைக்கன்று கட்டி
கல்யாணவீடு போல, அமர்க்களமாக பளிச்சென ஒரு தோற்றம்
தெருவே அழகு, தெரு நேரே ஒரு கோவில் இருபக்கமும் வீடு
வாசலில் வரிசையாக ஒரேபோல் கோலம் போட்டு இருந்தனர்.
வீட்டினுள்ளே சமையல் நன்னாருக்கும், ரசம் வாங்கிகுடிச்சா
ஆஹா நாக்கில் நீர் ஊறும் என்ற நினைவுடன்..
,
கையில் பூஜை சாமானோட குழந்தையையும் தூக்கிகொண்டு
ஒரு சிறியபெண் குருக்கள் மனைவி போலஇருந்தாள்.
மடிசார் கட்டிக்கொண்டு வெளியே வருவதை பார்த்தேன்
காசாக்கி கொண்டு இருக்கும் கலாசாரம்
இங்கே இயற்கையின் ஆசாரமாக கண்டேன்,
என்னோட நினைவுகளில் பைஃவ் ஸ்டார் ஹோட்டல் நினைவு
மறைந்து அந்த வீதி அந்த கிராமம் நிறைவாக நின்றது ,

Sunday, January 17, 2010

என் நினைவில் M. G. R

என் நினைவில் M. G. R


இந்த கால நடிகர்கள்,விட்டில் பூச்சிகளாக வந்துவிட்டு சினிமா என்ற
விளக்கில் விழுந்து நசிவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கு,
சினிமா என்பது பொழுது போக்கு சாதனம் ஆனால் அதையே
தனக்கு சாதகமாக எப்பிடி பயன் படுத்திகொள்வது என்பதை
மிகத்தெளிவாக தெரிந்து வைத்து இருந்தவர் எம் ஜி ஆர்,

பாட்டு என்றால் தன்னோட சினிமாவில் நல்ல ராகம் இருக்கணும்
ஒரு ரொமான்ஸ், ஒரு தத்துவம், ஒரு ஜாலி என்று இனம் பிரித்து
ஜனரஞ்சகமாக்கிவிடுவார், கதாநாயகி தேர்வும் அப்படியே செலக்ட்
செய்வார், தானே எல்லா வகையான சினிமாவித்தைகளையும் தெரிந்து
வைத்து இருந்தார், டான்ஸ் மூவ்மெண்ட்ஸுக்கு முக்யம் கொடுத்து
சினிமாவில் இப்போது செய்யும் டான்ஸ் அட்டகாசங்களுக்கு
சுழி போட்டவர் எம் ஜி ஆர், மட்டுமே, ஏழைமக்கள்,அன்றாட
கூலி வேலை செய்பவர்கள் கவலையை மறக்க எம் ஜி ஆர்
சினிமா ஆறுதலாக இருந்தது நிதர்சனம்,

அவரோட சண்டைகாட்சிகள் மிகப்பிரமாதமாக இருக்க
மிகப்பிராயாசைப்படுவார், புதிய உத்திகளை கையாண்டு
வட இந்திய பயில்வான்களிடம் பயிற்சிபெற்ற் ஸ்டண்ட்
மாஸ்டர்களை ஏற்பாடு செய்வார் என்பார்கள், தானே
டூப் போடாமல் செய்த சண்டை காட்சிகளும் உண்டென்பார்கள்

கவனம், ப்ரயாசை,பாரபட்சமற்று உதவிசெய்வது,கட்டுகோப்பானஉடம்பு
மனிதாபிமானம், மக்களிடையே எப்போதும் தன்னோட இமேஜ்
குறையாமல் பார்த்துக்கொள்வது எம் ஜி ஆர் அவர்களின்
தனித்தன்மை,ஆகர்ஷணம் என்பார்களே,அதுவே எம் ஜி ஆர்
அவர்களுக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு,

Wednesday, January 13, 2010

முச்சந்தி வீடு

எனக்கு அமைந்த வீடுகளில் அனேகமாக யாவரும் குடியிருக்க
பயந்தவையாகவே அமைந்தது,நாங்கள் குடி போனபின்புதான்
எங்களுக்குத்தெரியவரும், கரக்பூரில் முச்சந்திவீடு வீட்டுக்கு
எதிரே பிணங்கள் வந்துகொண்டே இருக்கும், பக்கத்தில் மயானம்
ஆதலால் முச்சந்தியில் பிணங்களுக்கும் தூக்குபவருக்கும் ஓய்வு
எடுத்துகொள்ள டைம் கொடுப்பார்கள், அப்போது அடிக்கப்படும்
மேளதாள வாத்ய ஒலி, மற்றும் கெண்டைவாத்யம் தேய்த்து
தேய்த்துஒலி எழுப்பும் ஓசை மனம் கலங்கிவிடும். யாருக்கும்,
யாரோ இறந்ததற்க்கு நாம் அழும்படியாக் செய்து விடுவார்கள்.

சஷ்டி கவசம் மனப்பாடம் ஆனது, இரவு நேரமென்றால் கேட்கவேண்டாம்,
தூக்கமேவராது..மேளத்தை அதிகமாக அடித்து தங்கள் பயத்தை போக்கி
கொள்வார்களோ என்ன்வோ யாருக்குத்தெரியும், அப்பா இதை சொன்ன
போது புது விளக்கம் கொடுத்தார்கள், நான் முச்சந்தியில் நின்றதாக
நினைத்து வருத்தம் கொண்டார், என் கண் கலங்கினா அப்பா
தாங்கமாட்டார் என்பதை அப்போது உணர்ந்தேன்,

,
மூன்று தெரு கூடும் இடம் முச்சந்தி, முச்சந்தியில் நடுவே நிற்கக்கூடாது
என்பார்கள். முச்சந்தியில் பூசணிக்காய் திருஷ்டிக்காக உடைப்பார்கள்,
சின்னக்குழந்தைக்கு மிளகா சுற்றிப்போட்டுவிட்டு முச்சந்தியில்போட்டு
விட்டுப்போவார்கள், தலை முடியை மந்திரித்து போட்டுவிட்டு போவானாம்
மந்திரவாதிகள், இதெல்லாம் பழைய கால மூட நம்பிக்கைகள்,
என்றாலும், பகைவர்களிடம் உன்னை முச்சந்தியில் நிறுத்துகிறேன் என்று
மிரட்டுவார்கள்.கொஞ்சம் தைரியமும் பதவியும், பணபலமுள்ளவரும்...

அப்பாவிற்க்கு முச்சந்த்தி வீடு பற்றி சொல்லி ரசிக்க வைத்தேன்,
என்னோட அப்பா டிராபிக் ரூலை மாற்றியவர் என்றே சொல்லலாம்.
ரோடு நடுவே நடக்கச்சொல்வார், காரணம் ப்ளாட்பாரத்தில் ஓரங்களில்
மனிதர்கள் பலவிதத்தில் அசிங்கம் செய்து வைத்து இருப்பார்கள்,என்று...
செருப்பு போட்டுண்டாலும் நாங்கள் அஜாக்கிரதையில் அசிங்கத்தை
மிதித்துவிடுவோமென்று கருதி, பஸ்,கார் சைக்கிள் ஸ்கூட்டர் எதிரே
வந்தால் விலகி நடக்கணும் என்பார். “ஆ” என்று வானத்தை பார்த்து
நடந்து வந்தாயா என்று கேட்பார், அப்பாவிற்கு எங்கள் காலை
சரியாக் சுத்தம் செய்து கொண்டோமா என்பதில் சந்தேகமேஎப்போதும்
பின்னங்காலை வைத்து கண்டு கொள்வார், அப்பாவிற்கு சேறும் சகதியும்
கொண்ட எங்கள் கால்களை கண்டால் அப்படி ஒரு கோபம் வரும்.

எப்படி நாங்கள் கால்களை அலம்பி சுத்தப்படுத்திக்கொண்டாலும்
த்ருப்தி கொள்ளவே மாட்டார், சாப்பிடுவதற்க்கு முன்னால் அனைவர்
கையையும் காட்டசொல்வார், எப்படிசுத்தமாக கைகழுவிகொண்டாலும்
ஒரே அழுக்கு என்று சொல்லி இரண்டு முறை கை கழுவ வைப்பார்
தாவலை என்பார், பேரன் பேத்திகளென்றால் கைக்கு முத்தம் கொடுப்பார்
ரோஸா இருக்கே என்று அவர்களை மகிழ்ச்சி கொள்ளச்செய்வார்.
முச்சந்தி வீடை இப்போ நினைச்சாலும் எனக்கு கலங்கும்..

முச்சந்தி வீடு

Saturday, January 9, 2010

நானும் ஹிந்தியும்

நானும் ஹிந்தியும்



அரோரா மிலானி பாம்பே த்யேட்டர்கள், கரக்பூரில் உள்ள சினிமாஹால்கள்.
தமிழ் சினிமா 15 நாளுக்கு ஒரு தடவை போடுவார்கள், தமிழ்
நாட்டில் படம் ரீலீஸாகி கணிசம் ஒரு வருடம் ஆகி இருக்கும்,
நாங்கள் தவறாமல் போவோம், அப்போதெல்லாம் கை ரிக்க்ஷா
மனிதரால் இழுக்கப்படும் , இரண்டு ரிக்க்ஷா வைத்துகொள்வோம்
ஒன்றில் நானும் என் ஆத்துக்காரர், மற்றொன்றில் என் மாமனார்
ஏறிக்கொண்டு செல்வோம், 2 மைல் வீட்டிலிருந்து தியேட்டர்
ரிக்க்ஷா கூலி மொத்தம் 10ரூபா கூட ஆகாது,
ஹிந்தி சினிமாக்கு உள்ள கூட்டம் நம் தமிழ் சினிமாவிற்கு
இருக்காதுஎன்பதைப்பார்க்கும் போது வருத்தமாக இருக்கும்.

ஹிந்தி சினிமா பார்க்க ஆசையாக இருக்கும், அப்போதெல்லாம்
ராஜேந்திரகுமார், ஜாய் முகர்ஜி, ராஜ்குமார். ஜிதேந்திரா சுனில்தத்,
களத்தில் போட்டியுடன் இருந்தனர், தீலீப்குமார், ராஜ்கபூர் தேய்வடைந்து
வந்தனர், அதேபோல் சாய்ராபானு,ஆஷாபரேக்,லீலா சந்தவார்க்கர்,
என்ற நடிகைகள், பாட்டு என்றால் முகேஷ், ரபி, மன்னாடே,
ப்ரபலம், நான் பார்த்த முதல் சினிமா சூக் கயா ஆச்மான், ராஜேந்திரகுமார்
சாய்ராபானு நடிப்பில் சக்கைபோடு போட்டது, என்னோட மாமனாருக்கு
ஹிந்தி சினிமா கதையை என் கற்பனையில் சொல்லி சமாளிப்பேன்
எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் கதை சொல்வதை கேளுங்கள்
என்ற் நிபந்தனையுடன், என் மாமனார் நிபந்தனைகளுக்கு கட்டுபடுபவர்
என்பதை அப்போதுதான் பிடித்து கொண்டேன், அவரை என் வழிக்கு
கொண்டுவர என் வாழ்க்கை விசனமில்லாம்ல்,ஒடிய ரகசியமும் அதில்
இருந்தது, நிறைய சந்தேகங்கள் இருந்தாலும், கேட்கமாட்டார்,
பாட்டுக்கள் ரேடியோவில் போடும்போது நாம பார்த்த சினிமா
பாட்டு என்பதை கண்டிபிடித்துவிடுவார்,முகேஷின் ராத் ஒளர் தின்
பாட்டு அப்போது மிக அதிகமாக பினாகாகீத்மாலவில் (ரேடியோ
பினாகா டூத் பேஸ்ட் விளம்பர நிகழ்ச்சி) ஒலிபரப்பினார்கள்

ஹிந்தி அர்த்தம் நான் வாங்கி இருந்த இந்தி டிகஷ்னரியில்
பார்த்து தெரிந்து சொல்வேன், சூக் என்றால் வரண்ட ஆச்மான்
ஆகாயம், இப்படி படித்ததால் யாராவது ஹிந்தி பேசும் என்
கணவரின் ஆபிசு நண்பர்களிட்ம் என் மாமனார் என்னோட
நாட்டுப்பெண் ஹிந்தி நன்றாக பேசுவாள், எனவிளம்பரம்
கொடுத்துவிட்டார், அவர்கள், வந்தவுடன் ரொமப பிஸியாகஇருப்பதாக
காண்பித்து தப்பிவிடுவேன், மலையாளி நண்பர்கள்,அச்சா
சொன்னால் சிரிப்பார்கள், நாங்க உங்களுக்கு அச்சா ஒண்ணும்
இல்லை என்று, சாரே ஜஹாங் சே அச்சாவை கேலி செய்வார்கள்
சாரே என்றால் பிற ஆண்களை அழைப்பார்கள்,மலையாளிகள்
ஜஹாங் என்றால் இடம் அச்சா அப்பா , சந்திரனுக்கு சென்ற
நம்மூர் ஆளு ராகேஷ் இந்திராகாந்தியிடம் நம் இந்தியா எல்லா
இடங்களிலுமிருந்து பூமியை பார்க்கும்போது இந்தியா அச்சா
நன்னாருக்கு என்றானாம், அச்சா, கரோ, ஜாவோ ,ஆவோ
நாலு வார்த்தை வைத்து ஹிந்தி இலக்கணம் எழுதினேன்
என்றால் மிகையாகாது, எதையும் எதிர்கொள்ள என்னை
தயார் செய்து கொண்ட இடம் கரக்பூர்,

Sunday, January 3, 2010

சோட்டாணிக்கரை பகவதி

சோட்டாணிக்கரை பகவதி

சிலிர்க்கவைக்கும் சோட்டாணிக்கரை பகவதி தரிசனம், ஒரு வேட்டுவப்பெண்ணுக்கு ஜோதியாக தரிசனம் கொடுத்ததால் ஜோதியானக்கரா என்று பெயர் மாறி
சோட்டாணிக்கரா ஆனதென்பார்கள், பகவதி விடியற்காலை
வித்யா ஸ்வருபிணி மத்யான காலத்தில் லட்சுமியாகவும்,இரவில் துர்க்கையாகவும்
காட்சிகொடுக்கிறாள். சோட்டாணிக்கரை பகவதிஎன்றால் ஏதோ
பேய் ஆவி உலகு சம்பந்தமான பகவதி என்று தவறாக நினைத்துக்கொள்கிறார்கள்,
இது தவறு,அம்பாள் சாந்தஸ்வரூபிணி, முப்பெருந்தேவி, மைசூர் சாமுண்டீஸ்வரி,
மூகாம்பிகை, சோட்டாணிக்கரை பகவதி, மூவரும் ஓன்றே, ஆதி சங்கரரின்
வேண்டுதலால் மூன்று இடத்திலும் அம்பாள் சாந்நித்தியம் கொண்டுள்ளாள்.

தீவினைகளினால் வந்த மனப்பேயை விரட்டும் தெய்வம், சரஸ்வதி பூஜை
அன்று அக்ஷ்ராப்பியாசம் குழந்தைகளுக்கு இங்கே செய்விக்கிறார்கள்...
சோட்டாணிக்கரை பகவதி நம் மனக்கவலை அகற்றி அருள் புரிகிறாள்,
வீட்டில் சோட்டாணிக்கரை பகவதி உருவப்படம் வைத்து பூஜை செய்ய
குறைகள், நீங்கும், செய்வினை மாந்திரீகம் இவை அருகில் அண்டாது
என்று பூரண நம்பிக்கை கேரள மக்களுக்கு, நாமும் சரண் அடையலாம்
சோட்டாணிக்கரை பகவதி அம்பாளை,

ஒவ்வொரு மனிதன் உடலிலும் ஒருவிதமான காந்த ஈர்ப்பு சக்தி உள்ளது
அந்த காந்த ஈர்ப்பு சக்தியானது எண்ணற்ற அம்பாளின் அபிஷேகத்தின்
போது, தூப தீப ஆராதனையின் போது மெல்லிய ஒளி மற்றும் மேள
தாள ஒலி அலைகளாக மிதந்து நம்மேல் படும்போது (ஆண்கள் சட்டை
அணிந்து வராமல் வரவேண்டும் கேரளகோவில்களில் கட்டுப்பாடு
வைத்துள்ளார்கள்,) அந்த அலைகளை இழுத்து நம் உடல் உள்
வாங்கிக்கொள்கிறதாம், பெண்களுக்கு இயற்கையிலேயே உடலமைப்பு
சக்தியான் அலைகளை உள் வாங்கிக்கொள்ளும் மின்காந்த ச்க்தி
அதிகமாம் ஆண்களைவிட,, அது தவிர நகைககள் தங்கம் வெள்ளி
மின் கம்பிபோல் இயங்கி உள்வாங்கிக்கொள்ளுமாம், இது மனிதருக்கு
ஒருவித மருத்துவ சிகிச்சையாம், சோட்டாணிக்கரை பகவதி ஆதி
சங்கரருக்கு காஷாயம் வைத்து கொடுத்து தன்னோட கோவிலின்
அமைப்பை எப்படி அமைப்பது என்பதற்காக கடுமையான தவம்
இருந்த ஆதி சங்கரர்ரின்சரீரக்ஷீணத்தைதணித்ததாக் சொல்கிறார்கள்.
பகவதி ப்ரார்த்தனை தினமும் கூறுங்கள்...
அம்மே நாராயணா தேவி நாராயணா லக்ஷ்மி நாராயணா
பத்ரி நாராயணா