Saturday, March 13, 2010

வேளுக்குடி சொற்பொழிவிலிருந்து சில தகவல்கள் ந்ம்மாழ்வாரைப்பற்றி

நம்மாழ்வார் வேளாளர் என்ற விவசாய இனத்தவர், தந்தை காரிமாறன் திருக்குருங்கூர்
என்ற ஊரைசேர்ந்தவர் தாயார் உதயநங்கை, நெடுநாட்களாக குழ்ந்தை இல்லாத தம்பதிகள், மஹாவிஷ்ணுவின் பக்தர்கள், பகவான் தன்னோட அம்சமாக இந்த
தம்பதிகளுக்கு விஷ்வ்க்சேனர் பிறப்பார் என்று கோவில் அர்ச்சகர் வாயிலாக
தெரிவித்தாராம், மற்ற குழ்ந்தைகள் மாதிரி பிறந்தாலும் பிறந்தவுடன் அசையாமல்
அழாமல், கண்கள் திறக்காமல் இருந்ததாம்,மாறுதலாக இருந்த்தால் மாறன் என்ற
பெயர் வைத்தார்கள்,திருக்குறுங்குடியில் ஆதிநாத சுவாமியிடம் முறையிட்டார்கள்,
திருக்குருங்குடிகோவிலில் ஆழ்வார் பிறக்கும் முன்பு ஆதிசேஷன் புளியமரமாக
அவதாரம் செய்தாராம், புளியங்காய் இங்கே பழமாகாமல் விளையும் அதிசியம்
இன்றும் பார்க்கலாமாம்,இரவில் இலைகள் மூடாது மற்ற மரங்களைப்போல்
அதனால் உறங்காப்புளியமரம் என்ற பெயர் இந்த மரத்துக்கு, லட்சுமணரை
போல், ஆழ்வார்திருநகரி என்றபெயர் நம்மாழ்வார் இங்கே வந்து அமர்ந்ததால்..பெயராகியது
பெற்றோர் ஒரு தொட்டிலில் குழந்தையை போட்டு கோவிலில் சுவாமியிடம் முறையிட்டனர்,
குழந்தை ஒர் நாள் தொட்டிலிலிருந்து கீழே இறங்கி தவழ்ந்து மரத்தடியில் கால்களை
மடக்கி உட்கார்ந்து கண்களை மூடி த்யானத்தில் அமர்ந்ததாம்,16 வருடங்கள் அப்படியே அமர்ந்து இருந்த ஆழ்வாரை மக்கள் கூட்டமாக வந்து தரிசித்து இவர்,
“நம்” ஆழ்வார் என்று பெருமையாகச்சொல்லிகொண்டதால் நம்மாழ்வார் ஆகிவிட்டார்
சடகோபன், பராங்குசன் என்றெல்லாம் அழைப்பார்கள்.நம்மாழ்வார்பிறப்புக்குமுன்னால் “யானை வரும் முன்னே மணி ஒசை வரும் முன்னே” என்கிறார் போல் மதுரகவி என்பார் திருகோளூரைச்சேர்ந்தவர் பிறந்து இருந்தார் நம்மாழ்வாரைவிட பெரியவர், வட இந்திய யாத்திரை சென்று இருந்தாராம், அயோத்தியில் அவர் ஒரு ஒளியைதரிசித்தார், தெற்க்கு திசையில் தோன்றி அதன் ஆகர்ஷ்ணத்திற்க்கு ஆட்பட்டு அதன் பின்னால் வந்தாராம் அந்த ஒளி திருக்குறுங்குடியில் ஆதிநாதர் கோவிலில் வந்து சேர்ந்ததாம், மதுரகவி நம்மாழ்வாரின் தேஜஸ்தான் தன்னை இவ்விடம் கொண்டு வந்து நிறுத்திஉள்ளது என்பதை அறிந்தாராம்,
,மதுரகவி ஆழ்வார் தமிழ் இலக்கிய்மும் மற்றும் வேதாந்தங்களையும் படித்த பண்டிதர் கண்களை மூடி வாய் பேசாமல் இருக்கும் நம்மாழ்வாரை பரீக்ஷை செய்ய எண்ணினார்
,ஒருகல்லை பக்கத்தில் உள்ளகுளத்தில் போட்டார் சத்தம் கேட்டு நம்மாழ்வார் விழித்துக்கொண்டார்,
மதுரகவி அவரிடம்.
,
“செத்தது வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்டாராம்
அதற்க்கு நம்மாழ்வார் “அத்தைத்தின்று அங்கே கிடக்கும்” என்றாராம், அதாவது மனிதன்
இருக்கும் வரை மூளை அவன் அறிவு உடல் ஆத்மாவோடதொடர்புடன் செய்ல்படுகிறது
இறந்தபின்பு ஆத்மா அப்படியே இருக்கிறது, உடம்பு செத்துவிடுகிறது, ஆத்மா
தொடர்ந்து பகவானின் தொடர்புக்கு இணங்க செயல்படுகிறது என்ற அர்த்தம் பிறந்தது
(சிறியது) ஆத்மா, (செத்தது மனித உடம்பு),பகவானின் கட்டளைக்கு காத்து இருக்கும்
ஆத்மாவோ, நமோ நாராயணா என்று இருக்குமாம்,
மதுரகவி நம்மாழ்வாரின் கால்களில் விழுந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ள
வேண்டினார்,நம்மாழ்வாரின் பதிலில் இருந்த தெளிவும் ஆழமும் மதுரகவிக்கு
நம்மாழ்வாரை தன்னோட குருவாக ஏற்றுக்கொள்ள ஏக்கம் கொள்ளசெய்தது,
நம்மாழ்வார்எழுதசொன்ன பாசுரங்கள் Sriya:pathi என்றாக மதுரகவி எழுதினார்
என்பார்கள், மதுரகவி நம்மாழ்வாரை பகவானாக்வே கண்டதால் ஆதிநாதனை
பாடாமல் கண்ணின் நுண் சிறுத்தாம்பு என்ற கவிதையில் நம்மாழ்வாரை பாடினாராம்
அத்துணை குரு பக்தி, 35 வருடங்கள் புளியமர்த்தடியில் நம்மாழ்வார் இருந்தாராம்நம்மாழ்வார்
ஆசிர்வாதமாககொடுத்த நம்மாழ்வாரின் ஸ்வர்ணவிக்ரஹம் மதுரக்வி ஸ்ரீமன் நாராயண்னைக்கூட
கும்பிடாமல் நம்மாழ்வாரை பூஜை செய்வாராம், எல்லா திவ்யதேச பெருமாளும்
மற்றும் திருக்குருங்குடி ஆதிநாதபெருமாளும் அவ்ரவரவர் மேலே நம்மாழ்வார்
எழுதியபாசுரங்களை புளியமரத்தடிக்கே வந்து பெற்றுச்சென்றதாக கூறுகிறார்கள்
கருடவாஹனத்தில் மஹாலட்சுமியுடன் தரிசனம் செய்தாராம் பெருமாளை நம்மாழ்வார்
ரிக் சாம அதர்வண யஜூர் நான்கு வேதங்களின் சாராம்சமே திருவாய்மொழி
அப்பன் கோவிலில் இன்றும் சங்கில் குழந்தையான நம்மாழ்வார்க்கு பால் ஊட்டும்
உற்சவம் நடக்கின்றது, மாசிவிசாக்ம், வைகாசி விசாகம்(பிறந்தமாதம்)
இரண்டும் திருக்குறுங்குடி க்ஷேத்திரத்தில் விஷேச்ம்,கலியுக ஆரம்பத்தில்
நம்மாழ்வார் அவதாரம் செய்தார், அவருடைய பாசுரங்கள் அந்தாதி வகை
சேர்ந்தவையாகும், அடிவரவு என்பார்கள், ஒவ்வொருபாசுர முடிவும் அடுத்த
பாசுர ஆரம்பவார்த்தை அமையும் விதமாக இருக்கும், பகவானை
ப்ரபாவம் அதாவது அருள் எங்கும் பரவியிருக்கும்ப்ரமம், கருணை
அழகு என்று ஆழ்வார்கள் பாடி பஜனைவ்ழியே காதல் நாயகா
நாய்கி பாவ்ம்கொண்டு, தூது சென்று ,என்றுபலவிதமாக பகவானை
பக்தி செய்கிறார்கள், ஆழ்வார் அனைவரும் இவ்விதமாக பக்தி
செய்தாலும் நம்மாழ்வார் பாசுரங்களில் அதிகமான உணர்ச்சி
பாவம் உள்ளதாம், ந்ம்மாழ்வாரின் தலையில் கீரிடம்போல்
பகவான் அமர்ந்து அதற்கென்றே ஒரு உற்சவம் நட்க்கிறதாம்
அன்று திருக்குறுங்குடியில் பெருமாள் வைரமுடி சேவை
சாதிக்கிறார்ராம், கலியுக் ஆரம்பத்திலேயே ராமனுஜரின்
விக்ரஹம் நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரால் கொடுக்கப்பட்டதாம்
ராமனுஜர் சமஸ்க்ருதம் பரவியிருந்த அந்தகாலத்தில் தமிழில்
எழுதி இருந்த நம்மாழ்வார் பாசுரங்களை அப்போதைய
கால சம்ஸ்தானங்களில்விவரித்து மொழிபெய்ர்த்து அதற்கு பாஷ்யம்
எழுதி மக்களிடையே பரவச்செய்தார் என்கிறார்க்ள்

Tuesday, March 2, 2010

ஆவக்காய்

நான் ஆந்திரா வந்தபி றகு ஆவக்காய் மாங்கா வாங்கி ஊறுகாய் போட
எண்ணினேன்,தெலுங்கு ப்ராமணாளும் மற்ற வகை தெலுங்குக்காராளும்
ஆவக்கா ஊறுகா நன்றாக செய்வார்கள் என்று பலரிடம் பேசும் போது
அறிந்தேன், முதலில் நான் ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆவக்கா ஊறுகா
ரெசிப்பி கேட்டு தெரிந்து கொண்டேன், ஆந்திர்ரகள் ஆவக்காய் இல்லாமல்
பருப்புபொடி இல்லாமல் சாபிட மாட்டார்கள், அத்தனை கறிகாய்கள்
சமைத்தாலும் ஆவக்காய் ஊறுகாயை நிறைய நெய் சாதத்தில் விட்டு
பிசைந்து சாப்பிட்டுவிட்டுதான் மற்றவைகளை தொடுவார்கள்,


கொஞ்சமாதான் உரப்புசேர்த்துசெய்தோம் சாப்பிடுங்கோ என்று
கொடுப்பார்கள், கொஞ்ச உரப்பு என்பது குறைந்தது பத்து மிளகாய்
சேர்த்து செய்யப்பட்டு இருக்கும், பருப்பு பொடி திரிகையில் திரித்தால்
தான் மணம் என்பார்கள், மிளகாயில் பலவகை உண்டாம், என்னோட
ப்ரெண்ட் தங்களோட மிளகா தோட்டத்தில் அப்ப அப்ப காய்க்கின்ற
மிளகாயை அப்படியே பறித்து தின்பாளாம், ஆவக்காய்க்கு கல் உப்பு
சேர்ப்பார்கள். உப்பை காய வைப்பார்கள் நிழலில் ,காரம் மிளகாய்
மொரிச்சென்று காயவைத்து திரிப்பார்கள், கடுகும் அப்படியே அலம்பி
காயவைத்து பொடி செய்வார்கள். கடுகு மிளகாய் உப்பு மூன்றும்
பொடி செய்து ஒரே அளவு கலப்பார்கள், வெயில் காலம் எங்காத்தை
தவிர அனைத்து வீட்டிலும் ஊறுகாய் கம்பெனி மாதிரி ஊறுகா செய்வார்கள்.
தோசைக்காய் தக்காளி தக்காளிகாய் பழுத்தமிளகாய் இஞ்சி ஊறுகாய் செய்வார்கள்.
எங்காத்துக்கு இலவசமாக ஊறுகாய் கிடைக்கும், எனக்கு ஊறுகாய் போட
தெரியாமல் நான் செய்யவில்லை என்று பேசுவார்கள், நம்ம பக்கத்து ஊறுகாயை
கையால் தொடமாட்டார்கள், நான் கொடுக்கும் நீர் நெல்லி, நீர் எலுமிச்சை அவர்கள்
மோந்து பார்த்து இப்படி தண்ணீரா செய்தால் ஊசி விடும் என்பார்கள், நீர் எலுமிச்சை
நெல்லி செய்யமாட்டார்கள், அவற்றையும் ஆவக்காசைஸில் பொடிகலந்துசெய்வார்கள்,

ஒரு ஆந்திரர்கள் வீட்டு கல்யாணத்தில் சாப்பிட சென்றோம், இலையில்
முதலில் ஒரு ஸ்வீட் போட்டார்கள் அதன் பெயர் காஜா ,அப்புறம் இலையில்
பறிமாறினவை எல்லாமே உரப்பு அயிட்டங்கள் தான், எல்லோரும் சாப்பிட
ஆரம்பித்து விட்டார்கள் என்னைத்தவிர நான் சாதத்தில் கலந்துகொள்ள
சாம்பாரை எதிர்பார்த்து காத்திருந்தேன், அவர்கள் ஏன் சாப்பிட ஆரம்பிக்க
வில்லை என்றுவிசாரித்தார்கள் என்னை, சாம்பார் அல்லது ரசம் எதாவது
பறிமாறலையே என்றேன், சிரித்தார்கள், ஆவக்கா உந்தி (இருக்கு)
பருப்புபொடி உந்தி தொட்டுக்கொள்ள வைத்துஇருக்கும் கூட்டு காய்கறிகளை
காட்டி கலத்தில் பருப்பு காட்டி ஒன்னொன்னா பிசைந்து சாப்பிடுங்கள்
என்றனர், தொட்டுக்கொள்ள வைத்து இருக்கும் அயிட்டங்களை சாதத்துடன்
நான் கலந்து சாப்பிட்டால் எங்க் ஊரில் என்னசொல்வார்கள் தெரியுமா?
காளை மாடை ஓட்டி வயற்காட்டுக்கு செல்லும் வண்டிக்காரன் சாப்பிடும்
சோறு என்பார்கள் என்றேன், வண்டிக்காரர் தூக்குச்சட்டில அத்தனை சாதம்
கறிகாயும் கலந்து இருக்கும் என்றேன், சாப்பிடத்தெரியலயே என்று என்னை
பரிதாபமாக பார்த்தனர், கல்யாணாத்துக்கு போய்விட்டு அழுது கொண்டே
வந்ததை இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்,






,