Saturday, January 9, 2010

நானும் ஹிந்தியும்

நானும் ஹிந்தியும்



அரோரா மிலானி பாம்பே த்யேட்டர்கள், கரக்பூரில் உள்ள சினிமாஹால்கள்.
தமிழ் சினிமா 15 நாளுக்கு ஒரு தடவை போடுவார்கள், தமிழ்
நாட்டில் படம் ரீலீஸாகி கணிசம் ஒரு வருடம் ஆகி இருக்கும்,
நாங்கள் தவறாமல் போவோம், அப்போதெல்லாம் கை ரிக்க்ஷா
மனிதரால் இழுக்கப்படும் , இரண்டு ரிக்க்ஷா வைத்துகொள்வோம்
ஒன்றில் நானும் என் ஆத்துக்காரர், மற்றொன்றில் என் மாமனார்
ஏறிக்கொண்டு செல்வோம், 2 மைல் வீட்டிலிருந்து தியேட்டர்
ரிக்க்ஷா கூலி மொத்தம் 10ரூபா கூட ஆகாது,
ஹிந்தி சினிமாக்கு உள்ள கூட்டம் நம் தமிழ் சினிமாவிற்கு
இருக்காதுஎன்பதைப்பார்க்கும் போது வருத்தமாக இருக்கும்.

ஹிந்தி சினிமா பார்க்க ஆசையாக இருக்கும், அப்போதெல்லாம்
ராஜேந்திரகுமார், ஜாய் முகர்ஜி, ராஜ்குமார். ஜிதேந்திரா சுனில்தத்,
களத்தில் போட்டியுடன் இருந்தனர், தீலீப்குமார், ராஜ்கபூர் தேய்வடைந்து
வந்தனர், அதேபோல் சாய்ராபானு,ஆஷாபரேக்,லீலா சந்தவார்க்கர்,
என்ற நடிகைகள், பாட்டு என்றால் முகேஷ், ரபி, மன்னாடே,
ப்ரபலம், நான் பார்த்த முதல் சினிமா சூக் கயா ஆச்மான், ராஜேந்திரகுமார்
சாய்ராபானு நடிப்பில் சக்கைபோடு போட்டது, என்னோட மாமனாருக்கு
ஹிந்தி சினிமா கதையை என் கற்பனையில் சொல்லி சமாளிப்பேன்
எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் கதை சொல்வதை கேளுங்கள்
என்ற் நிபந்தனையுடன், என் மாமனார் நிபந்தனைகளுக்கு கட்டுபடுபவர்
என்பதை அப்போதுதான் பிடித்து கொண்டேன், அவரை என் வழிக்கு
கொண்டுவர என் வாழ்க்கை விசனமில்லாம்ல்,ஒடிய ரகசியமும் அதில்
இருந்தது, நிறைய சந்தேகங்கள் இருந்தாலும், கேட்கமாட்டார்,
பாட்டுக்கள் ரேடியோவில் போடும்போது நாம பார்த்த சினிமா
பாட்டு என்பதை கண்டிபிடித்துவிடுவார்,முகேஷின் ராத் ஒளர் தின்
பாட்டு அப்போது மிக அதிகமாக பினாகாகீத்மாலவில் (ரேடியோ
பினாகா டூத் பேஸ்ட் விளம்பர நிகழ்ச்சி) ஒலிபரப்பினார்கள்

ஹிந்தி அர்த்தம் நான் வாங்கி இருந்த இந்தி டிகஷ்னரியில்
பார்த்து தெரிந்து சொல்வேன், சூக் என்றால் வரண்ட ஆச்மான்
ஆகாயம், இப்படி படித்ததால் யாராவது ஹிந்தி பேசும் என்
கணவரின் ஆபிசு நண்பர்களிட்ம் என் மாமனார் என்னோட
நாட்டுப்பெண் ஹிந்தி நன்றாக பேசுவாள், எனவிளம்பரம்
கொடுத்துவிட்டார், அவர்கள், வந்தவுடன் ரொமப பிஸியாகஇருப்பதாக
காண்பித்து தப்பிவிடுவேன், மலையாளி நண்பர்கள்,அச்சா
சொன்னால் சிரிப்பார்கள், நாங்க உங்களுக்கு அச்சா ஒண்ணும்
இல்லை என்று, சாரே ஜஹாங் சே அச்சாவை கேலி செய்வார்கள்
சாரே என்றால் பிற ஆண்களை அழைப்பார்கள்,மலையாளிகள்
ஜஹாங் என்றால் இடம் அச்சா அப்பா , சந்திரனுக்கு சென்ற
நம்மூர் ஆளு ராகேஷ் இந்திராகாந்தியிடம் நம் இந்தியா எல்லா
இடங்களிலுமிருந்து பூமியை பார்க்கும்போது இந்தியா அச்சா
நன்னாருக்கு என்றானாம், அச்சா, கரோ, ஜாவோ ,ஆவோ
நாலு வார்த்தை வைத்து ஹிந்தி இலக்கணம் எழுதினேன்
என்றால் மிகையாகாது, எதையும் எதிர்கொள்ள என்னை
தயார் செய்து கொண்ட இடம் கரக்பூர்,

2 comments: