Wednesday, March 2, 2011

சிவராத்திரி

சிவராத்திரி
சிவாலயங்களில் கர்ப்பக்ருஹ்த்தின் மேற்க்கு பக்கத்தில் லிங்கோத்பவ மூர்த்தி இருக்கும்
லிங்கோத்பவ மூர்த்தி பரமேஸ்வரருடைய அறுபத்து நான்கு மூர்த்திகளில் ஒன்று,
வ்ருஷபாரூடர், அர்த்தநாரீசுவரர், ஹரிஹரர்.நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி
சோமாஸ்கந்தர், பிக்ஷாடணர்,ஊர்த்தவதாண்டவர்,ஜலந்தராசுரசம்ஹாரர், காலஸம்ஹாரர்,
இப்படி 64 வகையான மூர்த்திகள் சிவனுக்கு உண்டு,

லிங்கோத்பவ மூர்த்தி லிங்கத்துக்குள் இருக்கும், அதன் தலையின் ஜடாமகுடம் லிங்கவட்டத்துக்குள்
முடியாமல் இருக்கும், அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரை தெரியாது,
இந்த மூர்த்தியின் மேலே ஹமஸ்ரூபத்தில் ஒரு மூர்த்தியும், கீழே வராக மூர்த்தீருக்கும்,
இந்த லிங்கோத்பவ மூர்த்தி யார்?

ஆதியும் அந்தமும் இல்லாதவர் தாம் என்பதை உணர்த்துவதற்க்காகவே லிங்க வட்டத்துக்குள்
ஜடாமுடி முடியாமலும், கீழே பாதம் அதற்க்குள் அடங்காமலும் காட்சிதருகிறார் சிவன்
அடிமுடி எல்லை இல்லாமல் ஜ்யோதி ரூபமாக ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக
பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்,

ஜ்யோதி ஸ்வரூபமான நின்ற பரமசிவனை விஷ்ணு அவரது பாதத்தை பார்க்க பாதளம் வரை
வராக ரூபம் எடுத்து பார்க்கசென்றார், ஹ்ம்சரூபத்தில்(அன்னப்பறவை)ப்ர்ஹ்மா ஜ்டாமுடியை
பார்க்க மேலே சென்றார், ப்ர்ஹ்மா தான் முடியை அடைந்து பார்த்துவிட்டதாக தாழம்பூவை
சாட்சி வைத்து சொன்னார், பொய் சொல்லிய ப்ர்ஹ்மாவுக்கு கோவில் இல்லாமலும் பூஜை
இல்லாமலும் ஆகியது, தாழ்ம்பூ சிவபூஜைக்கு அர்ச்சிப்பது கிடையாது, விஷ்ணு

அடியை காணாமுடியாமல் திரும்பினார், விஷ்ணுவாலும் ப்ர்ஹ்மாவாலும் காண முடியாத
சிவனை எளிதில் காணமுடியும் என்றால், அன்போடு பக்தி செய்வதால் மட்டுமே முடியும்
ஆசு தோஷி என்பார்கள் சிவனை கேட்டமாத்திரத்தில் வரம் அருள்பவர்,
“ஆசுகவி என்றால் கேட்டவுடன் கவிபாடுபவர்” என்று அர்த்த்ம்,அதுபோல
சிவன் நாம் ஸ்மரித்த மாத்திரத்தில் அருள் செய்பவர், சிவராத்திரி அன்று சிவனுக்கு
பிடித்த வில்வத்தினால் பூஜை செய்து அருள் பெறுவோம்,

வட்டமான லிங்க ரூபத்துக்கு அடிமுடி கிடயாது (வட்டமான வஸ்துக்கள் எதுவானாலும்)
முக்கோணம் சதுரம் இவைகளுக்கு உண்டு, ஆதி அந்தமில்லா வஸ்து சிவம் என்பதை
காட்டுவதால் லிங்கம் வட்டமாக உள்ளது.