Wednesday, January 13, 2010

முச்சந்தி வீடு

எனக்கு அமைந்த வீடுகளில் அனேகமாக யாவரும் குடியிருக்க
பயந்தவையாகவே அமைந்தது,நாங்கள் குடி போனபின்புதான்
எங்களுக்குத்தெரியவரும், கரக்பூரில் முச்சந்திவீடு வீட்டுக்கு
எதிரே பிணங்கள் வந்துகொண்டே இருக்கும், பக்கத்தில் மயானம்
ஆதலால் முச்சந்தியில் பிணங்களுக்கும் தூக்குபவருக்கும் ஓய்வு
எடுத்துகொள்ள டைம் கொடுப்பார்கள், அப்போது அடிக்கப்படும்
மேளதாள வாத்ய ஒலி, மற்றும் கெண்டைவாத்யம் தேய்த்து
தேய்த்துஒலி எழுப்பும் ஓசை மனம் கலங்கிவிடும். யாருக்கும்,
யாரோ இறந்ததற்க்கு நாம் அழும்படியாக் செய்து விடுவார்கள்.

சஷ்டி கவசம் மனப்பாடம் ஆனது, இரவு நேரமென்றால் கேட்கவேண்டாம்,
தூக்கமேவராது..மேளத்தை அதிகமாக அடித்து தங்கள் பயத்தை போக்கி
கொள்வார்களோ என்ன்வோ யாருக்குத்தெரியும், அப்பா இதை சொன்ன
போது புது விளக்கம் கொடுத்தார்கள், நான் முச்சந்தியில் நின்றதாக
நினைத்து வருத்தம் கொண்டார், என் கண் கலங்கினா அப்பா
தாங்கமாட்டார் என்பதை அப்போது உணர்ந்தேன்,

,
மூன்று தெரு கூடும் இடம் முச்சந்தி, முச்சந்தியில் நடுவே நிற்கக்கூடாது
என்பார்கள். முச்சந்தியில் பூசணிக்காய் திருஷ்டிக்காக உடைப்பார்கள்,
சின்னக்குழந்தைக்கு மிளகா சுற்றிப்போட்டுவிட்டு முச்சந்தியில்போட்டு
விட்டுப்போவார்கள், தலை முடியை மந்திரித்து போட்டுவிட்டு போவானாம்
மந்திரவாதிகள், இதெல்லாம் பழைய கால மூட நம்பிக்கைகள்,
என்றாலும், பகைவர்களிடம் உன்னை முச்சந்தியில் நிறுத்துகிறேன் என்று
மிரட்டுவார்கள்.கொஞ்சம் தைரியமும் பதவியும், பணபலமுள்ளவரும்...

அப்பாவிற்க்கு முச்சந்த்தி வீடு பற்றி சொல்லி ரசிக்க வைத்தேன்,
என்னோட அப்பா டிராபிக் ரூலை மாற்றியவர் என்றே சொல்லலாம்.
ரோடு நடுவே நடக்கச்சொல்வார், காரணம் ப்ளாட்பாரத்தில் ஓரங்களில்
மனிதர்கள் பலவிதத்தில் அசிங்கம் செய்து வைத்து இருப்பார்கள்,என்று...
செருப்பு போட்டுண்டாலும் நாங்கள் அஜாக்கிரதையில் அசிங்கத்தை
மிதித்துவிடுவோமென்று கருதி, பஸ்,கார் சைக்கிள் ஸ்கூட்டர் எதிரே
வந்தால் விலகி நடக்கணும் என்பார். “ஆ” என்று வானத்தை பார்த்து
நடந்து வந்தாயா என்று கேட்பார், அப்பாவிற்கு எங்கள் காலை
சரியாக் சுத்தம் செய்து கொண்டோமா என்பதில் சந்தேகமேஎப்போதும்
பின்னங்காலை வைத்து கண்டு கொள்வார், அப்பாவிற்கு சேறும் சகதியும்
கொண்ட எங்கள் கால்களை கண்டால் அப்படி ஒரு கோபம் வரும்.

எப்படி நாங்கள் கால்களை அலம்பி சுத்தப்படுத்திக்கொண்டாலும்
த்ருப்தி கொள்ளவே மாட்டார், சாப்பிடுவதற்க்கு முன்னால் அனைவர்
கையையும் காட்டசொல்வார், எப்படிசுத்தமாக கைகழுவிகொண்டாலும்
ஒரே அழுக்கு என்று சொல்லி இரண்டு முறை கை கழுவ வைப்பார்
தாவலை என்பார், பேரன் பேத்திகளென்றால் கைக்கு முத்தம் கொடுப்பார்
ரோஸா இருக்கே என்று அவர்களை மகிழ்ச்சி கொள்ளச்செய்வார்.
முச்சந்தி வீடை இப்போ நினைச்சாலும் எனக்கு கலங்கும்..

முச்சந்தி வீடு

1 comment: