Saturday, May 22, 2010

திருக்கோளூர் பெண்மணி

திருக்கோளூர் பெண்மணி (ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும் என்ற புத்தகத்திலிருந்து)

நம்மாழ்வாரின் சிஷ்யரான மதுரகவிஆழ்வாரின் சொந்த ஊர் திருக்கோளூர்.
ராமானுஜர் திருக்கோளூர் தேடிவ்ந்தார்,வ்ழியில் ஒரு பெண்ணிடம் திருக்கோளூர்.
எங்கே உள்ள்து என்று விசாரித்தார், நீ அங்கே தான் வசிக்கிறாயா என்று கேட்டார்,
ராமானுஜர் கேட்டதற்க்கு அந்த பெண் ராமானுஜரை பார்த்து கும்பிட்டு
இப்படிச்சொன்னாள்..
முயல் புழுக்கை வயலிலே கிடந்தென்ன வரப்பிலே கிடந்தென்ன?
அகம் ஒழித்தேனா விதுரரைப்போல,
தாய்க்கோலம் செய்தேனா அனுசூயைப்போல
பிஞ்சிலே பழுத்தேனா ஆண்டாளைப்போல்,
அந்தரங்கம் சொன்னேனா த்ரிஜடையைப்போல
தெய்வத்தைப்பெற்றேனா தேவகியைப்போல்,
ஆயனை வளர்த்தேனா யசோதையைப்போல
அவல் பொரி ஈந்தேனா குசேலரைப்போல,
ஆயுதங்கள் ஈந்தேனா அகஸ்தியர் போல
இடை கழியில் கண்டேனா முதலாழ்வார் போல,
வழிஅடிமை செய்தேனா இளையாழ்வார்போல
அக்கரையில் விட்டேனா குக்ன் ஆழ்வார்போல்.
கண்டுவந்தேன் என்றேனா திருவடியைப்போல
ராமானுஜர் கண்களில் கண்ணீர் தாரை வழிந்ததாம்.
எத்தனை நுணுக்கமாக திருக்கோளுரில் வசிக்க பெரும்பேறு பெற்று இருக்க வேண்டும்
என்ப்தை தெரிவித்து இருக்கிறாள் திருக்கோளூர் பெண்மணி,

Saturday, May 8, 2010

அம்மா

என்னோட அம்மா எழுத்தாற்றல் உள்ளவர், சுகமான நினைவுகள்
என்ற புத்தகம் எழுதி இருக்கிறார், வயது 84 ஆகிறது, அம்மாவோட
சுகமான நினைவுகள் புத்தகத்தில் பழைய காலத்து நடைமுறை வாழ்க்கை
எப்படி இருந்த்து என்பதையும் பெண்கள் புக்ககத்தில் வாழ்ந்த விதங்களையும்
அழ்காக விவரித்து படித்துப்பார்க்க தூண்டுவதாக எழுதி இருக்கிறார்.
அம்மா ஒரு சுவையான சம்பவத்தை விவரமாக சொல்லும்போது அந்த
சம்பவம் நாம் நேரில்பார்த்தாற்போல் இருக்கும், நகைச்சுவை கலந்து
விவரிக்கும் தன்மை நம்மை ரசிக்கச்செய்யும், எதாவது காரியங்களை
அப்புறம் செய்து கொள்ளலாம் என்று சோம்பேறித்தன்மாக தள்ளி
செய்ய அனுமதிக்க மாட்டார், உடனுக்குடன் செய்துவிடுவார்,
வீட்டில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் தன்னால் இயன்ற
உதவிகளை இன்றளவும் செய்து வ்ருகிறார், படிப்பதற்க்கு புத்தகம்
பள்ளிக்கட்டணம், வேலைசெய்பவருக்குப்புடவை என்று வாங்கிகொடுப்பார்
கடவுள் பக்தி இருந்தாலும், தீவிர ஆன்மீகவாதி கிடையாது, நாம் செய்யும்
நற்க்கருமங்கள் நமக்கு நல்ல பலனைத்தந்துவிடும் என்பார்,

அம்மாவின் சாப்பாடு இப்போல்லாம் வெகுவாக குறைந்து விட்டது
அம்மாவின் சமையல், அம்மா சாப்பிடும் ருசி பிறர்க்கு ஆசையாக
சமைத்துப்போடுவது இவற்றை இன்று நினைத்தாலும் வெகு ப்ரமாதம் என்று சொல்வேன்,
அம்மா தன்னோட கருத்துகளில் முடிவுகளில் யாரையும் யோசனை
கேக்கவே மாட்டார், திடமான கருத்து உள்ளவர், பிறர்க்கு தன் யோசனைகளை
வலியுறுத்தியதில்லை விளக்கம் மட்டுமே சொல்வார், கன்வின்ஸ் என்பார்களே
அப்படி சம்மதிக்க வைத்துவிடுவார், அம்மா அழுதது சமீபத்தில் என் தங்கை
இறந்த சமயம் மட்டுமே, அழுகையே வரலை என்பார், மனதுக்குள் துக்கம்
இருந்தாலும் வெளியே காட்டமாட்டார், எல்லோரும் எல்லை மீறி அழுதாலும்
அம்மா அழமாட்டார், நிறையபுத்தங்கள் படிப்பார், அந்தக்காலத்து நாவல்கள்
பிடிக்கும் அம்மாவிற்க்கு, அம்மாவிற்க்கு பிடித்த பாடகிகள் எம்.எஸ், டி.கே
பட்டம்மாள், அந்தகாலத்து எல்லா பாடகியரும் என்று சொல்லலாம்
எல்லோரையும் நன்றாக கூர்ந்து கவனித்து அவர்களின் சேஷ்டைகளை
சிலபழக்கங்களை மிம்க்கிரி செய்வார், நிறையத்தோழிகள் அம்மாவிற்க்கு
அம்மாவிடம் அனைவரும் சீக்கிரம் நண்பர்கள் ஆகிவிடுவார்கள்.
(என் அம்மவின் சுகமானநினைவுகளில் இன்றைய வாழ்க்கை மாறுதல்களை
எப்படி பார்த்து ரசித்து இருக்கிறார் படியுங்கள், நான் ரசித்த பகுதி)
வெவ்வேறுவிதமானவாழ்க்கை மாறிய பழக்கவழக்கங்கள்,அதுவும் சிறிது சிறிதாக
மாறி உள்ளது,உலக்கை,,உரல்,ஆட்டுக்கல்,அம்மி, விறகடுப்பு,கரிஅடுப்பு,ஸ்டவ்
மரத்தூள் அடுப்பு.அரிக்கேன்விளக்கு,பவர்விளக்கு, பெட்ரோமாஸ் விளக்கு
பாவாடை தாவணி,புடவை ,க்வுன்,சாப்பாட்டில் மாறுதல், இதெல்லாம் போய்
இப்போது கேஸ் அடுப்பு, க்ரைண்டர், மிக்ஸி,சுடிதார்,பேண்ட்,பனியன்,
இதுதான் ரொம்பநாளாக இருப்பது போல் ந்மக்கு தோற்றம் உண்டாகிறது
சாப்பாட்டில் ப்ரெட், ரைஸ்,நூடூல்ஸ்,இதுதான் ஹோட்டலில் சாப்பிடுவது
சர்வசாதாரணமாக உள்ளது,(இதெல்லாம் இல்லாமல் நான் இருந்ததே இல்லை)
என்பது போல்,முதலில் பஸ்ஸ்டாண்டில் ஏற்றிவிடப்போனோம், பிறகு
ரயில்வே ஸ்டேஷன் சென்றோம், இப்போது ஏர்போர்ட் செல்கிறோம்
இனிமேல் ராக்கெட்டில் ஏற்றிவிடப்போவோம், பிறகு நாரதர் மாதிரி
அவரவர்களாக்வே ரோடில் நடப்பது போல் வானத்துக்கும் பூமிக்கும்மாக
போய்வருவார்கள், வரிசையாக வானத்துக்கும் பூமிக்குமாக் கடைகள் கட்டி
வ்யாபாரம் செய்வார்களாக் இருக்கும் யார் க்ண்டது, நான் இப்போதுள்ள
மிக்சி க்ரைண்டர்,செல்,டிவி, போன், இதெல்லாம், கற்ப்னை செய்து கூட
பார்த்த்துஇல்லை, இதெல்லாம் இப்ப்டி எதிர்பாராமல் ந்டந்து இருக்கும்போது
இதுவும் நட்க்கும், க்ட்டாயம் நடக்கும் இந்த் உலகத்தில் எதுவும் நடக்காவிட்டால்
தான் ஆச்சரிய்ம்,சுகமோ துக்கமோ ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாயார் என்பவள்
சுமைதாங்கி என் அம்மா அதற்க்கு விதி விலக்கு இல்லை என்றாலும் எங்களை
நல்ல வாழ்க்கை பய்ணத்தில் ஏற்றி சுமை இறக்கியவள் என்ற பெருமை பெற்றவள்.

Sunday, May 2, 2010