Saturday, January 23, 2010

இயற்கையின் ஆசாரம் இன்று ஹோட்டல் கலாசாரம்

இயற்கையின் ஆசாரம் இன்று ஹோட்டல் கலாசாரம்

சமீபத்தில் ஒரு சானலில் பைஃவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு மாமி
அவர்களுடன் ஒரு 25 வயது மதிக்கதக்க பெண் இருவரும் வடை
பஜ்ஜி மற்றும் சூடான அடை இன்னும் நிறைய நம்மோட சம்ப்ரதாயமான
உணவு வகைககள் அப்ப அப்ப செய்து கொடுத்து சர்வீஸ் செய்து
ஹோட்டலுக்கு வருபவரை மகிழ்ச்சிகொள்ளசெய்து கொண்டுஇருந்தனர்.

தரையில் அமர்ந்து அடுப்பு வைத்துக்கொண்டு வீட்டுசூழ்நிலை உண்டாக்கி
பதார்த்த்ங்களை இலையில் பரிமாறி என்று,நம் சென்னையில் ஒரு ஹோட்டலில்
தான்,வித்யாசமாகவும் வேடிக்கையாகவும் அந்தநிகழ்ச்சி இருந்தது,

வாசலில் கோலம் போட்டுக்கொண்டு , மடிசார் கட்டு, அய்யங்கார்கட்டு
தலைஅலங்காரம்,நவராத்திரி கொண்டாட்டம்,சுண்டல்வகைகள், மேலும்
கிராமப்பிண்ணனி இசை அவர்களின் புடவை அணியும் முறை என்று
ஹோட்டலில் காண்பித்து காசாக்கிக்கொண்டு இருந்தனர், விளக்கு
வகைகள்,மலையாள விளக்கு,அன்னவிளக்கு, மண்விளக்கு,ராஜஸ்தான்
வகை என்று வைத்து அழ்குசெய்து அசத்திகொண்டு இருந்தனர்,

பாஃரின் பெண்களுக்கு புடவை அலங்காரம்,நம்மூர் பெண்கள் டூபீஸ்
பாஃரின் பெண்கள் மடிசார், ம்ம்ம்ம்ம் என்னத்தைச்சொல்ல, காசாகி
கொண்டு இருக்கும் நம்மோட பண்பாடு, நாமே அதை பின்பற்ற
முயற்சிக்காத போது பாஃரின்க்காராளுக்கு இவர்கள் அதன் அர்த்தத்தை
சொல்லவில்லை அனர்த்தம் செய்து கொண்டு இருந்தனர்,

கும்பகோணம்கிட்ட ஒரு ஊர்வழியே சென்றபோது மண்வீடுகள்
செம்மண் இட்டு வாசல்ல கோலம் போட்டு வாழைக்கன்று கட்டி
கல்யாணவீடு போல, அமர்க்களமாக பளிச்சென ஒரு தோற்றம்
தெருவே அழகு, தெரு நேரே ஒரு கோவில் இருபக்கமும் வீடு
வாசலில் வரிசையாக ஒரேபோல் கோலம் போட்டு இருந்தனர்.
வீட்டினுள்ளே சமையல் நன்னாருக்கும், ரசம் வாங்கிகுடிச்சா
ஆஹா நாக்கில் நீர் ஊறும் என்ற நினைவுடன்..
,
கையில் பூஜை சாமானோட குழந்தையையும் தூக்கிகொண்டு
ஒரு சிறியபெண் குருக்கள் மனைவி போலஇருந்தாள்.
மடிசார் கட்டிக்கொண்டு வெளியே வருவதை பார்த்தேன்
காசாக்கி கொண்டு இருக்கும் கலாசாரம்
இங்கே இயற்கையின் ஆசாரமாக கண்டேன்,
என்னோட நினைவுகளில் பைஃவ் ஸ்டார் ஹோட்டல் நினைவு
மறைந்து அந்த வீதி அந்த கிராமம் நிறைவாக நின்றது ,

No comments:

Post a Comment