Wednesday, March 2, 2011

சிவராத்திரி

சிவராத்திரி
சிவாலயங்களில் கர்ப்பக்ருஹ்த்தின் மேற்க்கு பக்கத்தில் லிங்கோத்பவ மூர்த்தி இருக்கும்
லிங்கோத்பவ மூர்த்தி பரமேஸ்வரருடைய அறுபத்து நான்கு மூர்த்திகளில் ஒன்று,
வ்ருஷபாரூடர், அர்த்தநாரீசுவரர், ஹரிஹரர்.நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி
சோமாஸ்கந்தர், பிக்ஷாடணர்,ஊர்த்தவதாண்டவர்,ஜலந்தராசுரசம்ஹாரர், காலஸம்ஹாரர்,
இப்படி 64 வகையான மூர்த்திகள் சிவனுக்கு உண்டு,

லிங்கோத்பவ மூர்த்தி லிங்கத்துக்குள் இருக்கும், அதன் தலையின் ஜடாமகுடம் லிங்கவட்டத்துக்குள்
முடியாமல் இருக்கும், அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரை தெரியாது,
இந்த மூர்த்தியின் மேலே ஹமஸ்ரூபத்தில் ஒரு மூர்த்தியும், கீழே வராக மூர்த்தீருக்கும்,
இந்த லிங்கோத்பவ மூர்த்தி யார்?

ஆதியும் அந்தமும் இல்லாதவர் தாம் என்பதை உணர்த்துவதற்க்காகவே லிங்க வட்டத்துக்குள்
ஜடாமுடி முடியாமலும், கீழே பாதம் அதற்க்குள் அடங்காமலும் காட்சிதருகிறார் சிவன்
அடிமுடி எல்லை இல்லாமல் ஜ்யோதி ரூபமாக ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக
பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்,

ஜ்யோதி ஸ்வரூபமான நின்ற பரமசிவனை விஷ்ணு அவரது பாதத்தை பார்க்க பாதளம் வரை
வராக ரூபம் எடுத்து பார்க்கசென்றார், ஹ்ம்சரூபத்தில்(அன்னப்பறவை)ப்ர்ஹ்மா ஜ்டாமுடியை
பார்க்க மேலே சென்றார், ப்ர்ஹ்மா தான் முடியை அடைந்து பார்த்துவிட்டதாக தாழம்பூவை
சாட்சி வைத்து சொன்னார், பொய் சொல்லிய ப்ர்ஹ்மாவுக்கு கோவில் இல்லாமலும் பூஜை
இல்லாமலும் ஆகியது, தாழ்ம்பூ சிவபூஜைக்கு அர்ச்சிப்பது கிடையாது, விஷ்ணு

அடியை காணாமுடியாமல் திரும்பினார், விஷ்ணுவாலும் ப்ர்ஹ்மாவாலும் காண முடியாத
சிவனை எளிதில் காணமுடியும் என்றால், அன்போடு பக்தி செய்வதால் மட்டுமே முடியும்
ஆசு தோஷி என்பார்கள் சிவனை கேட்டமாத்திரத்தில் வரம் அருள்பவர்,
“ஆசுகவி என்றால் கேட்டவுடன் கவிபாடுபவர்” என்று அர்த்த்ம்,அதுபோல
சிவன் நாம் ஸ்மரித்த மாத்திரத்தில் அருள் செய்பவர், சிவராத்திரி அன்று சிவனுக்கு
பிடித்த வில்வத்தினால் பூஜை செய்து அருள் பெறுவோம்,

வட்டமான லிங்க ரூபத்துக்கு அடிமுடி கிடயாது (வட்டமான வஸ்துக்கள் எதுவானாலும்)
முக்கோணம் சதுரம் இவைகளுக்கு உண்டு, ஆதி அந்தமில்லா வஸ்து சிவம் என்பதை
காட்டுவதால் லிங்கம் வட்டமாக உள்ளது.

Friday, September 3, 2010

கோஹினூர் வைரம்


கோஹினூர் வைரம்

ஹிந்து புராணங்களில் கோஹினூர் 5000 வருடங்கள் பழமையானவைரம்,
இந்த கோஹினூர் வைரம் சதயபாமாவின் தந்தையான சத்யாஜித்திடம்
இருந்ததாம் ஜாம்பவான்என்பவரிடம்கைமாறி கடைசியில் ஸ்ரீகிருஷ்ணர் ஜாம்பவான்
பெண்ணை திருமணம் செய்து பெற்றார் என்பார்கள், “ச்யமந்தகமணி” என்ற
இந்த் வைரத்துக்கு ஸ்ரீகிருஷ்ணர் சரிதத்தில் தனி கதை இருக்கு, இந்த
ச்யமந்தகமணி” யால் யாதவகுலம் அழிந்தாலும், செல்வசெழிப்பும் பெற்றதாம்

700 வருடங்களுக்கு முன்னால் நம் நாட்டின் புண்யநதியான கிருஷ்ணா
கோதாவரி நதி கரைகளில் உள்ள சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்டது,

கோஹினூர் கண்டெடுக்கப்பட்ட இடம் கர்நாடகமாநில பகுதியாம்.
முகலாயமன்னர் பாபரின் மகன் ஹூமாயூன் இப்ரஹாம் லோடி எனற
அரசனை ஜெயித்து இந்த் அபூர்வவைரத்தை பெற்றாராம்,

பாரசீக ராஜா நாதீர் ஷா முகலாயமன்னர்களை வென்றார், அதில்
ஒருமுகலாய மன்னர் தன் தலைப்பாகையில் கோஹினூர் வைரத்தை
மறைத்து வைத்து மற்ற தங்க வைர நகைகளை நாதீர் ஷாவிடம்
கொடுத்தாராம், அப்போது நாதீர் ஷா வின் மனைவி உலகத்தின்
பெரியவைரம் முகலாயமன்னர்களிடம் உள்ளது தலைப்பாகையில்
ஒளித்து வைத்து இருக்கலாம்,என்று ரகசியமாக நாதீர் ஷாவிடம் சொல்ல

நாதீர் ஷா தந்திரமாக முகலாய மன்னரிடம்
நமக்குள் சமாதனம் செய்துகொள்வோம் என்று சொல்லி தலைப்பாகை
மாற்றிக்கொள்ள சொன்னாராம், வேறு வழி இல்லாமல் தலைப்பாகை
மாற்றிக்கொண்ட முகலாய மன்னர், தலைப்பாகைக்குள்இருந்த கோஹினூர்
வைரத்தை அந்தப்புரம்சென்று நாதீர் ஷா பார்த்து வியந்தாராம்,

இதன் விலை நிர்ண்யிக்கமுடியாது, உலகுக்கே உணவு அளிக்கலாம்
ஒருநாளைக்கு என்றாராம், கோஹினூர் என்றால் ‘ஜோதிமலை” என்று
பொருள்.முகலாயவமசம் அழிந்த்து, பாரசீகவம்சம் அழிந்த்து,
ஆப்கானிஸ்தானை ஜெயித்து சீக்கியராஜா ரஞ்சித்சிங் கோஹினூர்
வைரத்தை இந்தியாவின் ஒரு ஹிந்து கோவிலுக்கு கொடுக்க உயில்
எழுதி வைத்தார், சீக்கிய ராஜ்யம் அழிந்த்து, கிழ்க்கிந்தியர் ஆட்சி
வந்த்து, ப்ரிட்டிஷ் ப்ரபு டல்ஹொஸி ரஞ்சித்சிங் உயிலை மதிக்காமல்

விக்டோரியா ராணிக்கு கோஹினூர் வைரம் கொடுக்க்ஏற்பாடு செய்தார்
,விக்டோரியா ராணியின் கணவர் ஆல்பர்ட் 186 கேரட்
வைரத்தை 105 கேரட் ஆக பட்டை தீட்டினார், விக்டோரியா ராணியின்
மகுடத்தில் 2000 வைரங்களுக்கு நடுவே நடுநாயகமாக கோஹினூர் விளங்கியது,
ராணிகள் மட்டுமே அணியவேண்டும் என்ற சட்டம் இருந்த்து,
இன்று சாபத்திற்க்கு பயந்த்தோ என்னவோ லண்டன் டவர் கோட்டையில்
ப்ரிட்டிஷ் மன்னர்களின் அணிகலன்களுடன் பத்திரமாக உள்ளது,
விஷேச விழாக்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறார்கள்,

நன்றி “மாம்பலம் டைம்ஸ்”

Sunday, August 8, 2010

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம், “ஆடித்தபசு”அன்று
சங்கரன் கோவிலில் கோமதிஅம்மன் சிவனை நினைத்து
தபசு செய்கிறாள், நல்லகணவர் அமைவதற்க்கு ஆடிமாதம்
வேண்டிக்கொண்டோமானால். ஆவணியில் திருமணம் நடக்கும்
என்று சிலரும், நல்ல மழை வருவத்ற்க்கு ஆடிமாதம் அம்மனுக்கு
முளைப்பாறி சுமந்து மாரியம்மனை ப்ரார்த்த்னை செய்வார்கள்
ஆடிக்ருத்திகை முருகனுக்கு விஷேசம் க்ருத்திகைநட்சத்திரத்தில் பிறந்த
முருகனை நினைத்து பலவிதமான காவடி சுமப்பார்கள், புனித
நதிகளில் நீராடி பூஜை செய்து மங்கல்நாண் என்ற தாலி அணிந்துகொள்வார்கள்
மழை வருவதற்க்கும் பூஜை செய்வார்கள்.ஆடிப்பட்டம் தேடிவிதை ஆடிமாதம்
நிலத்தில் விதை விதைப்பார்கள் விவசாயிகள் ந்ம்ம ஊர் கிராமங்களில்.
பாவாடையை இருபுறமும் கைகளால் அகலமாக பிடித்து தலையைஆட்டிகொண்டு
பின்னல் குதிக்க ஓடி வரும்பெண்குழந்தையை ஞாபகத்திற்க்குகொண்டு
வருவது போல் இருக்கும்,பொங்கு நீர் விரிந்து பாயும் பூம்பொழில்
தாமிரபரணி ஆறு, ஆடி மாதம்ஆடிபெருக்கு அன்று,சுகமாக ஓடிவரும்,
அம்பா சமுத்திரத்தில் ஆடிபெருக்கு உற்சவம் அமர்க்களப்படும்,
கோலாட்ட ஜோத்திரை, மற்றும் கும்மி, ஆடல் பாடல் , அனைவர்
வீட்டிலிருந்தும் கட்டிசாதக்கூடை கட்டிக்கொண்டு 5 கிலோமீட்டர்
தொலைவுள்ள தாமிரபரணி ஆற்றங்கரை செல்வோம்,
ஆனி மாதமே அனைவரும் கோலாட்டம்,கும்மிபாட்டு, கற்றுகொள்வோம்,
அம்பாசமுத்த்ர்த்தில் நீச்சல் வீராங்கனைகள் இந்தியாவுக்கு பெருமைசேர்க்கும் அள்வில்
உள்ளார்கள், கன்யாகுமரியிலும் நான் பார்த்து இருக்கிறேன், இந்திய்விளையாட்டுத்துறை
கண்க்ளில் படாத்துதான் என் வ்ருத்தம் எல்லாம்.
பெரியபண்ணையார் வீட்டிலிருந்துஆரம்பித்து கிளம்பும் கோலாட்ட ஜோத்திரை,
குழந்தைகளுக்கு கொண்டாட்டம், பெரியவர்களுக்கு வேலைஎன்பதால்
திண்டாட்டம், ஒவ்வொருவர் வீட்டுக்கு முன்னால் வந்து கோலாட்டம் போடுவார்க்ள்
அந்தவீட்டில் உள்ளவர்கள் கோலாட்டத்தில் சேர்ந்து கொள்ளணும்,அடுத்த வீடு
அதேபோல் சென்று கூப்பிட்டு கொண்டு அனைவரும் கும்மிப்பாட்டு,கோலாட்டம்
அடித்துகொண்டே ஆற்றங்கரை சேர்ந்து விடுவோம்.

அனைவர்வீட்டிலிருந்தும் கலந்தசாதம் கொண்டுவருவார்கள், அம்மா ஸ்பெஷல் புளியஞ்சாத்ம்
அந்த ஊரில் எரிசேரி, புளிசேரி,ஒலன், என்றாக பாலக்காட்டு மலையாள சமையல் நிறைய
எல்லார் வீட்டிலும் செய்வார்கள், அம்மா இவற்றை ப்ர்மாதமாக் செய்வார்கள்,
என்னோட நண்பர்கள் அனைவருமே நீச்சலில் சாம்பியன்கள், மணலாத்தங்கரை,
படிக்கட்டுத்துறையிலிலிருந்துமிகத்தூர்த்தில்இருக்கும். நீச்சல் அடித்துக்கொண்டே மணலாத்தங்கரை,
செல்வது என்பது போட்டியாக ஆகும், என்க்கு நீச்சல் தெரியாது, இருந்தாலும் முயற்சி
செய்வேன், அப்பா எங்களை கல்லாத்தங்கரை அழைத்து செல்வார் அங்கே நீர் வரத்து
குறைவாக இருக்கும்,எங்க்ள் துணிகளை தோய்த்து,எங்களை குளிப்பாட்டி,துடைத்து
வீபூதி குங்குமம் அணிவித்து கோவிலுக்கு அழைத்து செல்வார், மரகதாம்பிகா கோவில்
அம்பாசமுத்திரத்தில் ப்ரசித்த்ம் அருகே ஆற்றங்கறை, தெய்வீகமணம் கமழ அமைந்து
இருக்கும், “அப்பா கிட்ட ஒளிஞ்சுக்கோ” நீச்சலடிக்க பயந்துண்டு என்பார்கள் என் ந்ண்பர்கள்

உண்மை நிலை வேறாக இருக்கும், ஆற்றங்கறையில் எங்களை இறக்கி கெட்டியாக் பிடித்து
கொண்டு குளிப்பாட்டி கரையில் கொண்டு விடுவார்ஒவ்வொருவராக, அப்பாமிகவும் ஜாக்ரதையாக
நாங்கள் அழுதாலும் நண்பர்களுடன் நீச்சலடிக்க விடமாட்டார், உனக்கு நீச்சலடிக்க
வரும் என்பதை ஒப்புக்கொள்கிறோம், என்று கேலி செய்வார், ஆனாலும் நான்
அப்ப அப்ப அப்பாவை ஏமாற்றி ஒடிவிடுவேன்,கூடு வண்டியில் வரும் என்னோட
ப்ரெண்ட்ஸ் சிதம்பரம் அவளோட எட்டு சகோதரிகள் ப்ரமாதமாக நீச்சல்அடிப்பார்கள்,
அவர்கள் மூடி திரை போட்ட கூடு வண்டியில்வந்து இறங்கி மணலாத்தங்கரையில்
குளித்து பூஜை செய்வார்கள், எங்கள் அப்பா நாங்கள் தினமும் குளிக்க ஆத்தங்கரைக்கு’
அவர்கள் வீட்டு வழியேதான் செல்வோம், அப்பாமுதலில்செல்ல பின்பு நாங்கள் கையில்
வாளி நிறைய துவைக்க துணி என்று எடுத்து செல்வதையும் அப்பாவின் அடக்கு முறைகளையும்
என்னிடம் கேலி செய்வார்கள், அவர்களை நானும் கேலிசெய்வேன் ஆத்தங்கரையில்
உங்களை எல்லோரும் பார்த்துவிட்டார்கள், அப்புறம் என்ன் கூடு வண்டியில் வரணும்? என்பேன்

அவர்கள் சைவ பிள்ளை இனத்தை சேர்ந்தவர்கள், வீரசைவம் என்று கூறிக்கொள்வார்கள்
வீடு சுத்தமாக இருக்கும், காலை மாலை தேவாரம் திருவாசக்ம் ப்டிப்பார்கள், 4 அடி உயர
பஞ்சமுக விளக்கு ஏற்றுவார்கள், சிதம்பரம் குற்றாலம் கல்லூரியில் ஆங்கில லெக்சர்ராக
வேலை பார்க்கிறாள், ஓய்வு பெற்று இருப்பாள், அவர்கள் வீடு பெரியதாக இருக்கும்,
பளபளவென துடைத்து வைப்பார்கள், மிகப்பெரியகுடும்பம் அவர்களோடது,கூடு வண்டியில்
என்னை மட்டும் கூட்டிசெல்வார்கள், அம்பையில் ராமச்சந்திர அய்யர் பெரியவக்கீல்
அவர் வீடும் குடும்பம் எங்கள் குடும்பத்திற்க்கு ந்ண்பர்கள், அவர்கள் வீட்டு டிபனுக்கும்
சாப்பாட்டுஸ்பெஷ்லுக்கும் என் அம்மா எங்களை அனுப்பி வைக்கவில்லை என்றால்
குறைப்பட்டுகொள்வார்கள், நிலா சாப்பாடு கச்சட்டியில் பிசைந்து அம்ருதமாக அன்புடன்
பரிமாறும் என் தோழி கோகிலாவின் பாட்டியை யார் மறக்க முடியும், முறையே லட்சுமி
மாமி பர்வதமாமி ச்ந்திரலேகா, இன்னும் நிறையபேர் சொல்லிக்கொண்டே போகலாம்,

சாக்ஷாக்ஷாத் பராசக்தியே வந்துவிட்டாளோ என்ற் தோற்ற்ம் உள்ள பராச்க்தி மாமி,மாமிபெண்கள்
கோமதி, கமலி,மரகதம் அக்கா என்னோட டிய்ரஸ்ட், வறுமையிலும் செம்மையான குடும்பம்,
மாமாவின் சொற்பநிலத்தின் வரும்படியில் குடும்பம் ஓடிற்று, பராசக்தி மாமி என்க்கு தோழி.
“குங்கும் பொட்டின் மங்களம்” அந்த மாமிக்குத்தான் பொருந்தும்,நூல் ம்டிசாரில் அழ்காக இருப்பார்
கணவ்னே கண்கண்ட தெய்வ்ம் அந்த் மாமிக்கு, பங்கஜ்ம்,லல்லி, அய்யங்காராத்து பெண்கள்,
அவ்ர்கள் எங்க்ளை வீட்டுக்குள் அநும்திக்க் மாட்டார்கள், நாங்கள் அவ்ர்கள் வீட்டில் உட்கார்ந்துவிட்டால்
சுத்தி செய்வார்கள், கோபாலாய்யர் டாக்டர்,மனைவி (குண்டு) இருவரும் 60 வ்ய்து தாண்டிய த்ம்பதி
குழ்ந்தைகள் பெண்கள் மாப்பிள்ளை அனைவரும் டாக்டர்கள், அவா குழ்ந்தைக்ள், ராம்ல்க்க்ஷ்மி, ஜானகி
கோலாட்ட்ம் பாட்டு என்று என்னோட் விளையாடுவார்க்ள், பாட்டி தினமும் விளக்கு ஏற்றி ந்மஸ்காரம் ப்ல
தடவை செய்வதற்க்கு தாத்தா வற்புறுத்த பாட்டி டிமிக்கி கொடுப்ப்து நாங்க்ள் ர்சிக்கும் நித்திய விளையாட்டு

கும்மி கோலாட்ட்ம் ஆடிக்கொண்டே “வண்ணத்தோகைமயில் ஆடுதே ஜோடி ஜோடியாகவே
நாமும் அதில் கூடியே பாடிடும் கிளிகள் அதோ”என்று பாடிக்கொண்டு ஆடிக்கொண்டும்
செல்லும்போதே புல்லாங்குழ்ல் இசைகேட்பது போல் மழை ஊரை நிரப்பும், நாங்க்ள் ஒருவ்ருக்கொருவர்
அன்பு மழையில் நனையும் போது தாமிரவருணி வெள்ளம் எங்கள் வீட்டு பின்னாலுள்ள
வாய்க்காலை நிரப்பும், ஆடிபெருக்கு ஞாபகங்கள் கண்களில் கண்ணீரை பெருக்கும்,

Thursday, June 10, 2010

பண்டரிபுரம்

யார் ஒருவன் என் தலைவாசலில் நின்று ஹரி என்கின்றானோ அவனுக்கு முக்தி
நிச்சயம், என்று பாண்டுரங்கன் கூறுகிறார், இந்திரபுரி என்று அழைக்கப்படும்
பாண்டுரங்கபுரத்தில் விட்டல் விட்டல் என்று அந்த ஊர் வாக்யேய்க்கார்ர்கள்
பாண்டுரங்கனை அழைக்கிறார்கள், ம்ஹாராஷ்டிர குருவாயூர் பண்டரிபுரம்,,
அபங்கம் என்ற் க்விதைகளை பாடிய் ப்க்தர்களும் விட்டல் என்றே அழைப்பார்கள்
காம்ம கோப்ம் க்ரோதம் இன்னும் வினைகளை அனுப்விக்க எடுத்த இந்த உடல், உபாதை
அனைத்தையும் போக்கிகொள்ள விட்டல் நாமம் சொல்ல எழுத என்று பாண்டு
ரங்கனை த்யானிக்க வேண்டும், விட்டுவிட்டேன் உன்னிடம் என்னுடையதுஎன்றுநான்கருதும்
அனைத்தையும் என்று சமர்ப்பண்ம்செய்து விட்டல் நாம்ம சொல்லி, ப்ரார்த்திக்கணும்,
ஞானேஸ்வர்ர என்ற பக்தர் க்ருஷ்ண்பக்த்ர்களில் ஸ்ரேஷ்டமான ஒருவர் அவருடைய் சமாதி
பண்டரிபுரம் அமைந்து உள்ள ஷோலாப்பூர் அருகே ஆலந்தி கிராமத்தில் உள்ளது

ஒவ்வொரு ஆடிஅமாவசை அன்றும் பக்தர்கள் நடைப்பய்ண்மாக் பண்டரிபுரம் செல்ல
அங்கே உத்தரவு கேட்க வருவார்களாம், க்ண்ணனின் தரிசன்ம் ப்ண்ட்ரிபுர்த்தில்
ப்க்த்ர்களுக்கு அவ்ர்களின் பஜ்னையின் போது நிச்சய்மாக கிடைக்கும் என்ற்
ந்ம்பிக்கைஉள்ளது, ப்ண்ட்ரி நாத்ன் ச்ன்ன்தி எதிரே தூணில் வெள்ளிக்கவசம் சார்த்தி
வைத்து உள்ளார்கள், கண்ணன் பஜனையில் கல்ந்து கொள்ள அந்த தூண் அருகே
நிற்பாராம், நாம்தேவர் இன்னும் மற்ற் அத்த்னை ப்க்த்ர்கள் பஜ்னையிலும்பண்டரிநாதன்
ஆடுவதை அந்த் காலத்தில் நேரில் தரிசித்தவர்கள் பாக்ய்ம் பெற்றவர்க்ள், இன்றும் அந்த்
ந்ம்பிக்கை அங்கே இருக்கிறது, ஆடிஅமாவாசை ஞானேஸ்வர்ர சமாதி கோவில்
கோபுரத்தின் மேலே உள்ள் கல்சங்கள், காற்று அடிக்காமலேயே ஆடுமாம் அப்படி
ஆடினால் கண்ணன் தரிசனம் பண்டரிபுரத்தில் நிச்சய்ம்உண்டு என்று உற்சாகமாக
உத்தரவு வாங்கிசெல்வார்களாம், ஆடிஅமாவாசை காற்று அடிக்காம்ல்
கோபுர கலச்ங்கள் ஆடுவது ஆச்சரிய்மன்றோ?காற்ற்டிக்காமல் ஆடும்
கல்ச்ங்களை இப்போதும் ஆடிஅமாவாசை தினத்தன்று பார்க்கலாம் என்கிறார்கள்.
நல்ல சகுனம் ப்ண்டரிபுரம் செல்ல என்றும் அர்த்தமாம். எருமையை வேத்மந்திரம்சொல்ல
வைத்தவர் ஞானேஸ்வரர், அனைத்தும் ப்ரம்ம மய்ம் என்ப்தை உணர்த்தியவர், ஆடிஅமாவாசை
ப்ண்டரிபுரத்தில் விசேஷ்ம் கண்ணன் தரிசன்ம், 150 மைல் நட்ந்து வந்து கண்ணன் தரிசன்ம்
செய்வார்கள், பண்டரிபுரம் காவல் தெய்வம் பீம பைர்வர், திரிபுராசுரனை வதம் செய்த
சிவ பெருமான் சரீரத்திலிருந்து பெருகிய வியர்வை ச்ந்திரபாகா ந்தியாக் உருவெடுத்து
இங்கே ஒடுகிறது, இதன் வேகத்தை பீம் பைர்வ்ர் கட்டுப்ப்டுத்தி அமைதியாக் ஓட்ச்செய்தார்
ப்க்த் புண்ட்ரீக்ரின் இல்லம் இந்த ந்திக்கரையில் இருக்கிறது, தினமும் தன் பெற்றோரை
ஸ்நான்ம் செய்விப்பாராம் இந்த் ந்தியில் புண்ட்ரீகர். த்ன் பெற்றோரை கைக்ளில்தூக்கி
சும்ந்து சென்று ஸ்நான்ம் செய்விப்ப்தை பார்த்து பண்ட்ரிநாத்ர் சந்திர்பாகா ந்தியை
புண்ட்ரீகர் வீட்டு வ்ழியே செல்ல ப்ணித்தாராம், திருப்பிவிட்டாராம், அரை ச்ந்திர்
வடிவில் திரும்பிய்தால் ச்ந்திர்பாகா ஆகிற்று, ,ம்ற்றும் பீம்ர்தி ஸ்ரீகிருஷ்ண் பீம்ர்தி
என்ற பல பெய்ர்கள் இந்த ந்திக்கு உண்டு,
த்ன் பெற்றோர்ஆழ்ந்த நித்திரையில் இருந்த் சமய்ம் க்ண்ண்ன் காட்சி கொடுத்தபோது
பாண்டுர்ங்கனை செங்க்ல் போட்டு அதிலே நிற்க் செய்தார் புண்ட்ரீகர்,
விட் என்றால் செங்க்ல் விட்டோபா செங்க்ல் மேல் நிற்ப்வ்ர், இடுப்பில் கைக்ளை
இர்ண்டுப்க்க்மும் வைத்து நிற்கும் மூல்வ்ரின் விக்ர்ஹம்.நாம் ந்ம் கைகளால் பாண்டுரங்கனின்
பாதம் தொட்டு ப்ரார்த்திக்கலாம், நாம்தேவ்ர் த்வாரம் வழியே நுழைந்து கானாபாய் பக்தை
ச்ந்நிதிவ்ழியே மூலவரை பார்க்க் செல்லணும், ருக்மணி ச்த்ய்பாமா த்னி த்னி ச்ந்நிதிக்ள்,
ப்ர்தான் வாயிலில் ப்வ்ள் விநாய்கர், முக்கோடி தேவ்ர்க்ள் ப்க்த்ர்க்ள் பாண்டுரங்கனின்
ந்ட்ன்த்தை தரிச்ன்ம் செய்த இட்த்தில் வெள்ளி கவச்ம் போட்ட் தூண், அதிலே க்ண்ண்னின்
ந்ட்ன்த்தை அனைவரும் தரிசித்தார்கள் என்று சொல்கிறார்கள், ப்ஜ்னை பாடிக்கொண்டு
ஆடிவரும் ப்க்தர்கள் இந்த் தூண் அருகே ப்க்தியுடன் ஆடுகிறார்கள்,
கல்தூண் விள்க்குட்ன் சிற்ப் வேலைபாட்டுடன் உள்ளது, க்ருடாழ்வார் ச்ந்நிதி,
சம்ர்த்த் ராமதாஸ்ர் ஸ்தாபித்த் ஆஞ்ச்நேய்ர் விக்ர்ஹ்ம் உள்ள்து, வெள்ளி பாதுகை
நாம்தேவ்ருடைய்து போற்றி பாதுகாகின்றன்ர்,16 கால் ம்ண்டபம் எதிரே உள்ள்து
சாந்த சக்குபாய் வீடு கோபால்பூரில் உள்ளது, சக்குபாய் புக்கக்த்தில் ஒரு
பாதாள் அறையில் அடைத்து வைக்க்ப்பட்டு இருந்தாள்,அங்கே கண்ண்ன் காட்சி
கொடுத்த்தை இன்றும் சித்தரித்து வைத்து உள்ளார்கள், சக்குபாய் மாவு அரைத்த்
யந்திர்ம்,மற்றும் ருக்மிணி ச்மேதராக் ம்ற்றும் சிவன் பார்வதி ந்ந்தியுட்ன் சக்குபாய்
ப்க்தைக்கு தரிச்ன்ம் கொடுத்து அங்கே கோவில் கொண்டு இருப்பதை பார்க்கலாம்
சிவ்னாக்வும் பாண்டுரங்கனாகவும் ஒரு சிவ்பக்தருக்கு காட்சிகொடுத்தாராம் க்ண்ணன்
ப்ரப்ர்ஹ்மலிங்க்ம் பஜே பாண்டுரங்கம், “பாண்டுரங்க் ஹ்ரி ஜெய் ஜெய் பாண்டுரங்க்
ஹ்ரி விட்ட்ல் விட்ட்ல் பாண்டுரங்கா” இந்த ஒசையும் ப்ஜனையும் பாட்டும் நிறைந்த்
பண்டரிபுரம் வாழ்வில் ஒருமுறையாவது தரிசித்து பாக்ய்ம் பெற் புண்ணிய்ம் செய்து
இருக்க வேண்டும் , விட்ட்ல் நாமம் எழுத வேண்டும் விட்டல் நாமம் நாவில் சொல்ல்
பழக வேண்டும், “விட்ட்ல் விட்ட்ல் விட்ட்ல் விட்ட்ல் விட்ட்ல் விட்ட்ல் விட்ட்ல்”

Saturday, May 22, 2010

திருக்கோளூர் பெண்மணி

திருக்கோளூர் பெண்மணி (ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும் என்ற புத்தகத்திலிருந்து)

நம்மாழ்வாரின் சிஷ்யரான மதுரகவிஆழ்வாரின் சொந்த ஊர் திருக்கோளூர்.
ராமானுஜர் திருக்கோளூர் தேடிவ்ந்தார்,வ்ழியில் ஒரு பெண்ணிடம் திருக்கோளூர்.
எங்கே உள்ள்து என்று விசாரித்தார், நீ அங்கே தான் வசிக்கிறாயா என்று கேட்டார்,
ராமானுஜர் கேட்டதற்க்கு அந்த பெண் ராமானுஜரை பார்த்து கும்பிட்டு
இப்படிச்சொன்னாள்..
முயல் புழுக்கை வயலிலே கிடந்தென்ன வரப்பிலே கிடந்தென்ன?
அகம் ஒழித்தேனா விதுரரைப்போல,
தாய்க்கோலம் செய்தேனா அனுசூயைப்போல
பிஞ்சிலே பழுத்தேனா ஆண்டாளைப்போல்,
அந்தரங்கம் சொன்னேனா த்ரிஜடையைப்போல
தெய்வத்தைப்பெற்றேனா தேவகியைப்போல்,
ஆயனை வளர்த்தேனா யசோதையைப்போல
அவல் பொரி ஈந்தேனா குசேலரைப்போல,
ஆயுதங்கள் ஈந்தேனா அகஸ்தியர் போல
இடை கழியில் கண்டேனா முதலாழ்வார் போல,
வழிஅடிமை செய்தேனா இளையாழ்வார்போல
அக்கரையில் விட்டேனா குக்ன் ஆழ்வார்போல்.
கண்டுவந்தேன் என்றேனா திருவடியைப்போல
ராமானுஜர் கண்களில் கண்ணீர் தாரை வழிந்ததாம்.
எத்தனை நுணுக்கமாக திருக்கோளுரில் வசிக்க பெரும்பேறு பெற்று இருக்க வேண்டும்
என்ப்தை தெரிவித்து இருக்கிறாள் திருக்கோளூர் பெண்மணி,

Saturday, May 8, 2010

அம்மா

என்னோட அம்மா எழுத்தாற்றல் உள்ளவர், சுகமான நினைவுகள்
என்ற புத்தகம் எழுதி இருக்கிறார், வயது 84 ஆகிறது, அம்மாவோட
சுகமான நினைவுகள் புத்தகத்தில் பழைய காலத்து நடைமுறை வாழ்க்கை
எப்படி இருந்த்து என்பதையும் பெண்கள் புக்ககத்தில் வாழ்ந்த விதங்களையும்
அழ்காக விவரித்து படித்துப்பார்க்க தூண்டுவதாக எழுதி இருக்கிறார்.
அம்மா ஒரு சுவையான சம்பவத்தை விவரமாக சொல்லும்போது அந்த
சம்பவம் நாம் நேரில்பார்த்தாற்போல் இருக்கும், நகைச்சுவை கலந்து
விவரிக்கும் தன்மை நம்மை ரசிக்கச்செய்யும், எதாவது காரியங்களை
அப்புறம் செய்து கொள்ளலாம் என்று சோம்பேறித்தன்மாக தள்ளி
செய்ய அனுமதிக்க மாட்டார், உடனுக்குடன் செய்துவிடுவார்,
வீட்டில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் தன்னால் இயன்ற
உதவிகளை இன்றளவும் செய்து வ்ருகிறார், படிப்பதற்க்கு புத்தகம்
பள்ளிக்கட்டணம், வேலைசெய்பவருக்குப்புடவை என்று வாங்கிகொடுப்பார்
கடவுள் பக்தி இருந்தாலும், தீவிர ஆன்மீகவாதி கிடையாது, நாம் செய்யும்
நற்க்கருமங்கள் நமக்கு நல்ல பலனைத்தந்துவிடும் என்பார்,

அம்மாவின் சாப்பாடு இப்போல்லாம் வெகுவாக குறைந்து விட்டது
அம்மாவின் சமையல், அம்மா சாப்பிடும் ருசி பிறர்க்கு ஆசையாக
சமைத்துப்போடுவது இவற்றை இன்று நினைத்தாலும் வெகு ப்ரமாதம் என்று சொல்வேன்,
அம்மா தன்னோட கருத்துகளில் முடிவுகளில் யாரையும் யோசனை
கேக்கவே மாட்டார், திடமான கருத்து உள்ளவர், பிறர்க்கு தன் யோசனைகளை
வலியுறுத்தியதில்லை விளக்கம் மட்டுமே சொல்வார், கன்வின்ஸ் என்பார்களே
அப்படி சம்மதிக்க வைத்துவிடுவார், அம்மா அழுதது சமீபத்தில் என் தங்கை
இறந்த சமயம் மட்டுமே, அழுகையே வரலை என்பார், மனதுக்குள் துக்கம்
இருந்தாலும் வெளியே காட்டமாட்டார், எல்லோரும் எல்லை மீறி அழுதாலும்
அம்மா அழமாட்டார், நிறையபுத்தங்கள் படிப்பார், அந்தக்காலத்து நாவல்கள்
பிடிக்கும் அம்மாவிற்க்கு, அம்மாவிற்க்கு பிடித்த பாடகிகள் எம்.எஸ், டி.கே
பட்டம்மாள், அந்தகாலத்து எல்லா பாடகியரும் என்று சொல்லலாம்
எல்லோரையும் நன்றாக கூர்ந்து கவனித்து அவர்களின் சேஷ்டைகளை
சிலபழக்கங்களை மிம்க்கிரி செய்வார், நிறையத்தோழிகள் அம்மாவிற்க்கு
அம்மாவிடம் அனைவரும் சீக்கிரம் நண்பர்கள் ஆகிவிடுவார்கள்.
(என் அம்மவின் சுகமானநினைவுகளில் இன்றைய வாழ்க்கை மாறுதல்களை
எப்படி பார்த்து ரசித்து இருக்கிறார் படியுங்கள், நான் ரசித்த பகுதி)
வெவ்வேறுவிதமானவாழ்க்கை மாறிய பழக்கவழக்கங்கள்,அதுவும் சிறிது சிறிதாக
மாறி உள்ளது,உலக்கை,,உரல்,ஆட்டுக்கல்,அம்மி, விறகடுப்பு,கரிஅடுப்பு,ஸ்டவ்
மரத்தூள் அடுப்பு.அரிக்கேன்விளக்கு,பவர்விளக்கு, பெட்ரோமாஸ் விளக்கு
பாவாடை தாவணி,புடவை ,க்வுன்,சாப்பாட்டில் மாறுதல், இதெல்லாம் போய்
இப்போது கேஸ் அடுப்பு, க்ரைண்டர், மிக்ஸி,சுடிதார்,பேண்ட்,பனியன்,
இதுதான் ரொம்பநாளாக இருப்பது போல் ந்மக்கு தோற்றம் உண்டாகிறது
சாப்பாட்டில் ப்ரெட், ரைஸ்,நூடூல்ஸ்,இதுதான் ஹோட்டலில் சாப்பிடுவது
சர்வசாதாரணமாக உள்ளது,(இதெல்லாம் இல்லாமல் நான் இருந்ததே இல்லை)
என்பது போல்,முதலில் பஸ்ஸ்டாண்டில் ஏற்றிவிடப்போனோம், பிறகு
ரயில்வே ஸ்டேஷன் சென்றோம், இப்போது ஏர்போர்ட் செல்கிறோம்
இனிமேல் ராக்கெட்டில் ஏற்றிவிடப்போவோம், பிறகு நாரதர் மாதிரி
அவரவர்களாக்வே ரோடில் நடப்பது போல் வானத்துக்கும் பூமிக்கும்மாக
போய்வருவார்கள், வரிசையாக வானத்துக்கும் பூமிக்குமாக் கடைகள் கட்டி
வ்யாபாரம் செய்வார்களாக் இருக்கும் யார் க்ண்டது, நான் இப்போதுள்ள
மிக்சி க்ரைண்டர்,செல்,டிவி, போன், இதெல்லாம், கற்ப்னை செய்து கூட
பார்த்த்துஇல்லை, இதெல்லாம் இப்ப்டி எதிர்பாராமல் ந்டந்து இருக்கும்போது
இதுவும் நட்க்கும், க்ட்டாயம் நடக்கும் இந்த் உலகத்தில் எதுவும் நடக்காவிட்டால்
தான் ஆச்சரிய்ம்,சுகமோ துக்கமோ ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாயார் என்பவள்
சுமைதாங்கி என் அம்மா அதற்க்கு விதி விலக்கு இல்லை என்றாலும் எங்களை
நல்ல வாழ்க்கை பய்ணத்தில் ஏற்றி சுமை இறக்கியவள் என்ற பெருமை பெற்றவள்.

Sunday, May 2, 2010