Sunday, August 8, 2010

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம், “ஆடித்தபசு”அன்று
சங்கரன் கோவிலில் கோமதிஅம்மன் சிவனை நினைத்து
தபசு செய்கிறாள், நல்லகணவர் அமைவதற்க்கு ஆடிமாதம்
வேண்டிக்கொண்டோமானால். ஆவணியில் திருமணம் நடக்கும்
என்று சிலரும், நல்ல மழை வருவத்ற்க்கு ஆடிமாதம் அம்மனுக்கு
முளைப்பாறி சுமந்து மாரியம்மனை ப்ரார்த்த்னை செய்வார்கள்
ஆடிக்ருத்திகை முருகனுக்கு விஷேசம் க்ருத்திகைநட்சத்திரத்தில் பிறந்த
முருகனை நினைத்து பலவிதமான காவடி சுமப்பார்கள், புனித
நதிகளில் நீராடி பூஜை செய்து மங்கல்நாண் என்ற தாலி அணிந்துகொள்வார்கள்
மழை வருவதற்க்கும் பூஜை செய்வார்கள்.ஆடிப்பட்டம் தேடிவிதை ஆடிமாதம்
நிலத்தில் விதை விதைப்பார்கள் விவசாயிகள் ந்ம்ம ஊர் கிராமங்களில்.
பாவாடையை இருபுறமும் கைகளால் அகலமாக பிடித்து தலையைஆட்டிகொண்டு
பின்னல் குதிக்க ஓடி வரும்பெண்குழந்தையை ஞாபகத்திற்க்குகொண்டு
வருவது போல் இருக்கும்,பொங்கு நீர் விரிந்து பாயும் பூம்பொழில்
தாமிரபரணி ஆறு, ஆடி மாதம்ஆடிபெருக்கு அன்று,சுகமாக ஓடிவரும்,
அம்பா சமுத்திரத்தில் ஆடிபெருக்கு உற்சவம் அமர்க்களப்படும்,
கோலாட்ட ஜோத்திரை, மற்றும் கும்மி, ஆடல் பாடல் , அனைவர்
வீட்டிலிருந்தும் கட்டிசாதக்கூடை கட்டிக்கொண்டு 5 கிலோமீட்டர்
தொலைவுள்ள தாமிரபரணி ஆற்றங்கரை செல்வோம்,
ஆனி மாதமே அனைவரும் கோலாட்டம்,கும்மிபாட்டு, கற்றுகொள்வோம்,
அம்பாசமுத்த்ர்த்தில் நீச்சல் வீராங்கனைகள் இந்தியாவுக்கு பெருமைசேர்க்கும் அள்வில்
உள்ளார்கள், கன்யாகுமரியிலும் நான் பார்த்து இருக்கிறேன், இந்திய்விளையாட்டுத்துறை
கண்க்ளில் படாத்துதான் என் வ்ருத்தம் எல்லாம்.
பெரியபண்ணையார் வீட்டிலிருந்துஆரம்பித்து கிளம்பும் கோலாட்ட ஜோத்திரை,
குழந்தைகளுக்கு கொண்டாட்டம், பெரியவர்களுக்கு வேலைஎன்பதால்
திண்டாட்டம், ஒவ்வொருவர் வீட்டுக்கு முன்னால் வந்து கோலாட்டம் போடுவார்க்ள்
அந்தவீட்டில் உள்ளவர்கள் கோலாட்டத்தில் சேர்ந்து கொள்ளணும்,அடுத்த வீடு
அதேபோல் சென்று கூப்பிட்டு கொண்டு அனைவரும் கும்மிப்பாட்டு,கோலாட்டம்
அடித்துகொண்டே ஆற்றங்கரை சேர்ந்து விடுவோம்.

அனைவர்வீட்டிலிருந்தும் கலந்தசாதம் கொண்டுவருவார்கள், அம்மா ஸ்பெஷல் புளியஞ்சாத்ம்
அந்த ஊரில் எரிசேரி, புளிசேரி,ஒலன், என்றாக பாலக்காட்டு மலையாள சமையல் நிறைய
எல்லார் வீட்டிலும் செய்வார்கள், அம்மா இவற்றை ப்ர்மாதமாக் செய்வார்கள்,
என்னோட நண்பர்கள் அனைவருமே நீச்சலில் சாம்பியன்கள், மணலாத்தங்கரை,
படிக்கட்டுத்துறையிலிலிருந்துமிகத்தூர்த்தில்இருக்கும். நீச்சல் அடித்துக்கொண்டே மணலாத்தங்கரை,
செல்வது என்பது போட்டியாக ஆகும், என்க்கு நீச்சல் தெரியாது, இருந்தாலும் முயற்சி
செய்வேன், அப்பா எங்களை கல்லாத்தங்கரை அழைத்து செல்வார் அங்கே நீர் வரத்து
குறைவாக இருக்கும்,எங்க்ள் துணிகளை தோய்த்து,எங்களை குளிப்பாட்டி,துடைத்து
வீபூதி குங்குமம் அணிவித்து கோவிலுக்கு அழைத்து செல்வார், மரகதாம்பிகா கோவில்
அம்பாசமுத்திரத்தில் ப்ரசித்த்ம் அருகே ஆற்றங்கறை, தெய்வீகமணம் கமழ அமைந்து
இருக்கும், “அப்பா கிட்ட ஒளிஞ்சுக்கோ” நீச்சலடிக்க பயந்துண்டு என்பார்கள் என் ந்ண்பர்கள்

உண்மை நிலை வேறாக இருக்கும், ஆற்றங்கறையில் எங்களை இறக்கி கெட்டியாக் பிடித்து
கொண்டு குளிப்பாட்டி கரையில் கொண்டு விடுவார்ஒவ்வொருவராக, அப்பாமிகவும் ஜாக்ரதையாக
நாங்கள் அழுதாலும் நண்பர்களுடன் நீச்சலடிக்க விடமாட்டார், உனக்கு நீச்சலடிக்க
வரும் என்பதை ஒப்புக்கொள்கிறோம், என்று கேலி செய்வார், ஆனாலும் நான்
அப்ப அப்ப அப்பாவை ஏமாற்றி ஒடிவிடுவேன்,கூடு வண்டியில் வரும் என்னோட
ப்ரெண்ட்ஸ் சிதம்பரம் அவளோட எட்டு சகோதரிகள் ப்ரமாதமாக நீச்சல்அடிப்பார்கள்,
அவர்கள் மூடி திரை போட்ட கூடு வண்டியில்வந்து இறங்கி மணலாத்தங்கரையில்
குளித்து பூஜை செய்வார்கள், எங்கள் அப்பா நாங்கள் தினமும் குளிக்க ஆத்தங்கரைக்கு’
அவர்கள் வீட்டு வழியேதான் செல்வோம், அப்பாமுதலில்செல்ல பின்பு நாங்கள் கையில்
வாளி நிறைய துவைக்க துணி என்று எடுத்து செல்வதையும் அப்பாவின் அடக்கு முறைகளையும்
என்னிடம் கேலி செய்வார்கள், அவர்களை நானும் கேலிசெய்வேன் ஆத்தங்கரையில்
உங்களை எல்லோரும் பார்த்துவிட்டார்கள், அப்புறம் என்ன் கூடு வண்டியில் வரணும்? என்பேன்

அவர்கள் சைவ பிள்ளை இனத்தை சேர்ந்தவர்கள், வீரசைவம் என்று கூறிக்கொள்வார்கள்
வீடு சுத்தமாக இருக்கும், காலை மாலை தேவாரம் திருவாசக்ம் ப்டிப்பார்கள், 4 அடி உயர
பஞ்சமுக விளக்கு ஏற்றுவார்கள், சிதம்பரம் குற்றாலம் கல்லூரியில் ஆங்கில லெக்சர்ராக
வேலை பார்க்கிறாள், ஓய்வு பெற்று இருப்பாள், அவர்கள் வீடு பெரியதாக இருக்கும்,
பளபளவென துடைத்து வைப்பார்கள், மிகப்பெரியகுடும்பம் அவர்களோடது,கூடு வண்டியில்
என்னை மட்டும் கூட்டிசெல்வார்கள், அம்பையில் ராமச்சந்திர அய்யர் பெரியவக்கீல்
அவர் வீடும் குடும்பம் எங்கள் குடும்பத்திற்க்கு ந்ண்பர்கள், அவர்கள் வீட்டு டிபனுக்கும்
சாப்பாட்டுஸ்பெஷ்லுக்கும் என் அம்மா எங்களை அனுப்பி வைக்கவில்லை என்றால்
குறைப்பட்டுகொள்வார்கள், நிலா சாப்பாடு கச்சட்டியில் பிசைந்து அம்ருதமாக அன்புடன்
பரிமாறும் என் தோழி கோகிலாவின் பாட்டியை யார் மறக்க முடியும், முறையே லட்சுமி
மாமி பர்வதமாமி ச்ந்திரலேகா, இன்னும் நிறையபேர் சொல்லிக்கொண்டே போகலாம்,

சாக்ஷாக்ஷாத் பராசக்தியே வந்துவிட்டாளோ என்ற் தோற்ற்ம் உள்ள பராச்க்தி மாமி,மாமிபெண்கள்
கோமதி, கமலி,மரகதம் அக்கா என்னோட டிய்ரஸ்ட், வறுமையிலும் செம்மையான குடும்பம்,
மாமாவின் சொற்பநிலத்தின் வரும்படியில் குடும்பம் ஓடிற்று, பராசக்தி மாமி என்க்கு தோழி.
“குங்கும் பொட்டின் மங்களம்” அந்த மாமிக்குத்தான் பொருந்தும்,நூல் ம்டிசாரில் அழ்காக இருப்பார்
கணவ்னே கண்கண்ட தெய்வ்ம் அந்த் மாமிக்கு, பங்கஜ்ம்,லல்லி, அய்யங்காராத்து பெண்கள்,
அவ்ர்கள் எங்க்ளை வீட்டுக்குள் அநும்திக்க் மாட்டார்கள், நாங்கள் அவ்ர்கள் வீட்டில் உட்கார்ந்துவிட்டால்
சுத்தி செய்வார்கள், கோபாலாய்யர் டாக்டர்,மனைவி (குண்டு) இருவரும் 60 வ்ய்து தாண்டிய த்ம்பதி
குழ்ந்தைகள் பெண்கள் மாப்பிள்ளை அனைவரும் டாக்டர்கள், அவா குழ்ந்தைக்ள், ராம்ல்க்க்ஷ்மி, ஜானகி
கோலாட்ட்ம் பாட்டு என்று என்னோட் விளையாடுவார்க்ள், பாட்டி தினமும் விளக்கு ஏற்றி ந்மஸ்காரம் ப்ல
தடவை செய்வதற்க்கு தாத்தா வற்புறுத்த பாட்டி டிமிக்கி கொடுப்ப்து நாங்க்ள் ர்சிக்கும் நித்திய விளையாட்டு

கும்மி கோலாட்ட்ம் ஆடிக்கொண்டே “வண்ணத்தோகைமயில் ஆடுதே ஜோடி ஜோடியாகவே
நாமும் அதில் கூடியே பாடிடும் கிளிகள் அதோ”என்று பாடிக்கொண்டு ஆடிக்கொண்டும்
செல்லும்போதே புல்லாங்குழ்ல் இசைகேட்பது போல் மழை ஊரை நிரப்பும், நாங்க்ள் ஒருவ்ருக்கொருவர்
அன்பு மழையில் நனையும் போது தாமிரவருணி வெள்ளம் எங்கள் வீட்டு பின்னாலுள்ள
வாய்க்காலை நிரப்பும், ஆடிபெருக்கு ஞாபகங்கள் கண்களில் கண்ணீரை பெருக்கும்,

No comments:

Post a Comment