Tuesday, March 2, 2010

ஆவக்காய்

நான் ஆந்திரா வந்தபி றகு ஆவக்காய் மாங்கா வாங்கி ஊறுகாய் போட
எண்ணினேன்,தெலுங்கு ப்ராமணாளும் மற்ற வகை தெலுங்குக்காராளும்
ஆவக்கா ஊறுகா நன்றாக செய்வார்கள் என்று பலரிடம் பேசும் போது
அறிந்தேன், முதலில் நான் ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆவக்கா ஊறுகா
ரெசிப்பி கேட்டு தெரிந்து கொண்டேன், ஆந்திர்ரகள் ஆவக்காய் இல்லாமல்
பருப்புபொடி இல்லாமல் சாபிட மாட்டார்கள், அத்தனை கறிகாய்கள்
சமைத்தாலும் ஆவக்காய் ஊறுகாயை நிறைய நெய் சாதத்தில் விட்டு
பிசைந்து சாப்பிட்டுவிட்டுதான் மற்றவைகளை தொடுவார்கள்,


கொஞ்சமாதான் உரப்புசேர்த்துசெய்தோம் சாப்பிடுங்கோ என்று
கொடுப்பார்கள், கொஞ்ச உரப்பு என்பது குறைந்தது பத்து மிளகாய்
சேர்த்து செய்யப்பட்டு இருக்கும், பருப்பு பொடி திரிகையில் திரித்தால்
தான் மணம் என்பார்கள், மிளகாயில் பலவகை உண்டாம், என்னோட
ப்ரெண்ட் தங்களோட மிளகா தோட்டத்தில் அப்ப அப்ப காய்க்கின்ற
மிளகாயை அப்படியே பறித்து தின்பாளாம், ஆவக்காய்க்கு கல் உப்பு
சேர்ப்பார்கள். உப்பை காய வைப்பார்கள் நிழலில் ,காரம் மிளகாய்
மொரிச்சென்று காயவைத்து திரிப்பார்கள், கடுகும் அப்படியே அலம்பி
காயவைத்து பொடி செய்வார்கள். கடுகு மிளகாய் உப்பு மூன்றும்
பொடி செய்து ஒரே அளவு கலப்பார்கள், வெயில் காலம் எங்காத்தை
தவிர அனைத்து வீட்டிலும் ஊறுகாய் கம்பெனி மாதிரி ஊறுகா செய்வார்கள்.
தோசைக்காய் தக்காளி தக்காளிகாய் பழுத்தமிளகாய் இஞ்சி ஊறுகாய் செய்வார்கள்.
எங்காத்துக்கு இலவசமாக ஊறுகாய் கிடைக்கும், எனக்கு ஊறுகாய் போட
தெரியாமல் நான் செய்யவில்லை என்று பேசுவார்கள், நம்ம பக்கத்து ஊறுகாயை
கையால் தொடமாட்டார்கள், நான் கொடுக்கும் நீர் நெல்லி, நீர் எலுமிச்சை அவர்கள்
மோந்து பார்த்து இப்படி தண்ணீரா செய்தால் ஊசி விடும் என்பார்கள், நீர் எலுமிச்சை
நெல்லி செய்யமாட்டார்கள், அவற்றையும் ஆவக்காசைஸில் பொடிகலந்துசெய்வார்கள்,

ஒரு ஆந்திரர்கள் வீட்டு கல்யாணத்தில் சாப்பிட சென்றோம், இலையில்
முதலில் ஒரு ஸ்வீட் போட்டார்கள் அதன் பெயர் காஜா ,அப்புறம் இலையில்
பறிமாறினவை எல்லாமே உரப்பு அயிட்டங்கள் தான், எல்லோரும் சாப்பிட
ஆரம்பித்து விட்டார்கள் என்னைத்தவிர நான் சாதத்தில் கலந்துகொள்ள
சாம்பாரை எதிர்பார்த்து காத்திருந்தேன், அவர்கள் ஏன் சாப்பிட ஆரம்பிக்க
வில்லை என்றுவிசாரித்தார்கள் என்னை, சாம்பார் அல்லது ரசம் எதாவது
பறிமாறலையே என்றேன், சிரித்தார்கள், ஆவக்கா உந்தி (இருக்கு)
பருப்புபொடி உந்தி தொட்டுக்கொள்ள வைத்துஇருக்கும் கூட்டு காய்கறிகளை
காட்டி கலத்தில் பருப்பு காட்டி ஒன்னொன்னா பிசைந்து சாப்பிடுங்கள்
என்றனர், தொட்டுக்கொள்ள வைத்து இருக்கும் அயிட்டங்களை சாதத்துடன்
நான் கலந்து சாப்பிட்டால் எங்க் ஊரில் என்னசொல்வார்கள் தெரியுமா?
காளை மாடை ஓட்டி வயற்காட்டுக்கு செல்லும் வண்டிக்காரன் சாப்பிடும்
சோறு என்பார்கள் என்றேன், வண்டிக்காரர் தூக்குச்சட்டில அத்தனை சாதம்
கறிகாயும் கலந்து இருக்கும் என்றேன், சாப்பிடத்தெரியலயே என்று என்னை
பரிதாபமாக பார்த்தனர், கல்யாணாத்துக்கு போய்விட்டு அழுது கொண்டே
வந்ததை இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்,






,

No comments:

Post a Comment