Friday, February 12, 2010

சிவராத்திரியும் ஸ்ரீசைல ஞாபகமும்

த்வாதச் ஜோதிர்லிங்கங்கள் பனிரெண்டு(த்வா என்றால் இரண்டு தசம்
பத்து ) தாமாகவே ஸ்வயம்புவாக்த்தோன்றியதால் அதாவது யாராலும்
ப்ரதிஷ்டை செய்யப்படாத லிங்கங்கள்.வேதகாலத்துக்கும் முன்பிருந்தவை
அளவிடமுடியாத தேஜஸ் (ஒளி) கொண்டலிங்கமூர்த்திகள்.
அவற்றில் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனா ஜோதிர்லிங்கமும் ஓன்று,
நாங்கள் ஆந்திராவில் இந்த்க்ஷேத்திரத்தை சென்று தரிசித்தோம்,

கஷ்டங்க்ள் நீங்கி நற்கதிஅடைய சிவனுக்கு தனதுக்ஷேத்திரத்திலேயேமிக்க
பிடித்தமான ஸ்ரீ சைலம் நாம் சென்றோமானால் சிவனை ப்ரமராம்பிகையை
தரிசித்து முக்தி அடையலாம், அனுக்ரஹமூர்த்தி சிவனோடு மல்லிகை
கொடியாய் ப்ரமராம்பாள். சிவராத்திரி விஷேசம், ஸ்ரீ சைலத்தில்..

நந்தியை வாஹனமாகவும் நந்தியின் சகோதரன் பர்வதனை மலையாகவும்
சிவன் ஏற்றுக்கொண்ட புண்ணியத்தலம், சிவராத்ரி நாளில் இங்கு சிவனை
வணங்குபவர்களுக்கு பாவவிமோசனம் செய்து முக்திஅளிப்பதாக
பார்வதியிடம் சிவன் கூறுவதாகபுராணம் கூறுகிறது, 108 கஜமுள்ள
துணியை கோபுர நந்தி முகமண்டபத்தில் சுற்றிசிவராத்திரி அன்று
சேனை உற்சவம் நடத்துவார்க்ள். பூஜை முடிந்து துணியை துண்டுகளாக்கி
பக்தரக்ளுக்கு ப்ங்கிடுவார்க்ள். ஜமூலா தலைபாகை உற்சவம் என்பார்கள்,

தூளி தரிசனம் சிறப்பு, வேறூ எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பு
இவ்விதமான விதம் கிடையாது, பக்தர்கள் தங்கள் கால்ககளைகூடக்
கழுவாமல் தூசியோடு வந்து தேவாலயத்தில் சுவாமியை தரிசிக்கலாம்
மல்லிகார்ஜுனா லிங்கத்தை தொட்டு பூஜிக்கலாம், ப்ர்த்யேகப்பூஜை இது
என்பார்கள்,தினமும் உண்டு, ஸ்ரீசைல சிகர தரிசன்ம் விஷேசம்,
மலைமேலே வீற்றிருக்கும் நந்தியின் கொம்புகளிடையே இருந்து
மல்லிகார்ஜுனா ஜோதிர்லிங்க கோபுரதரிசனம் செய்வார்கள்

பாதாள கங்கை க்ருஷ்ணா நதியாக சுழித்துக்கொண்டு வருகிறாள்
சித்தரும் ஞானியரும் தேவர்களூம் மற்றும் ஜீவராசிகளும் மனிதரும்
மலையில் கிடைக்கும் மூலிகைகளாலும், நோய்தீர்க்கும் மூலிகை
வாசமிக்க காற்றாலும் ஸ்ரீ சைலம் தேடி வந்து வசிக்கின்றனர்.

விஞ்ஞானிகள் பூமி ஆராய்ச்சியாளர்கள்.மலையின் மருத்துவ
மற்றும் ரசாய்னத்தன்மையினால் ஆராய்ச்சிமேற்கொண்டுள்ளனர்
ப்ரமரம் என்றால் வண்டு அவற்றை மாலையாக போட்டுக்கொண்டு
அருணாசுரன் என்ற அசுரனை அம்பிகை அழித்ததனால் ப்ரமராம்பாள்
என்ற பெயர் வந்ததாம், இந்த அம்பாள் அஷ்டமா சக்தியில் ப்ராமணீ
சக்தி என்பார்கள்,

நந்தி பூஜை ஆந்திராவில் விஷேசமாகச்செய்வார்கள், மீதம் வைக்காமல்
நந்தி ப்ராசத்ம் சாப்பிடுவோம், அதற்காக அளவாக செய்து பரிமாறுவார்கள்.
மீதம் வைப்பது மற்றப்ரசாதங்களுக்குவேணுமானால் சரியாக இருக்கலாம்
நந்தி பூஜை ப்ரசாதம் மகத்துவம் தனியான சிறப்பு என்கிறார்கள்
மீதம் வைப்பதை.பெறும் தவறாக எண்ணுகிறார்கள்
..
நந்திகேச மஹாபாக சிவத்யான பராயண
உமா சங்கரசேவார்த்தம் அனுக்ஞ்யாம் தாதுமர்ஹ்ஸி

No comments:

Post a Comment