Monday, February 1, 2010

கங்கையும் காசியும்

கங்கையும் காசியும்
சில கோவில்கள், தீர்த்தங்கள் நம்மை மறக்க முடியாமல் செய்துவிடும்.
அவற்றில் கங்கையும் காசியும், என்னோடு வந்தவர்கள் பலர் காசிக்கு
ஏன் தான் வந்தோமோ என்று அலட்டிக்கொண்டார்கள், காரணம்நாங்கள்
மஹாசிவராத்திரி அன்று காசியில் யாத்திரை சென்று இருந்தோம்,
கூட்டம் நிறைய இருந்தாலும் வரிசையில் நின்று பார்த்தோம்,

காசி வாசே லோக புண்யே என்றாக இரண்டு நாட்கள் அங்கே
தங்கினோம், எனக்கு காசி மிகவும் பிடிக்கும், 4 முறை சென்றாலும்
மறுபடி போகதோன்றும் ஒரு ஸ்தலம், காரணம் கங்கைக்கரைதான்
அங்கே கங்கை அமைதியாக வராது, ஹரித்துவாரில் தெளிவாக
ஓடி வரும் கங்கை காசியில் குழம்பி சுழன்று கலங்கி வருகிறாள்.

படித்துறையில் உட்கார்ந்து கங்கை ஏன் நீ இப்படிக் குழம்பி
சுழன்று கலங்கி வருகிறாய் என்று கேட்கத்தோன்றும், அதற்கு
நான் ஒரு விடை நினைத்தேன், இறந்து போன மனிதர்களின்
குழப்பங்கள் வேதனைகள் பாபங்கள், அத்தனையையும்
தன்னுள்ளே வாங்கிக்கொள்வதனால்என்று, கங்கை நீரை
ஆராய்ச்சி செய்த உலகப்புகழ் விஞ்ஞானிகள் கங்கையில்
எந்த நோயாளி அதாவது எயிட்ஸ் நோயாளியானாலும்
ஸ்நானம் செய்தாலும் சாக்கடை நீர் கலந்தாலும் கொசுக்கள்
கிருமிகள் உடனே நசிந்து விடுவதாகவும் கண்டுபிடித்துள்ளார்கள்.

திருப்பதி தொலைகாட்சியில் சிவானந்தலஹரி விளக்கம்
தெலுங்கில் கோடீஸ்வரரவ் என்ற பண்டிதர் சொல்கிறார்
அவர் தெலுங்கில் ஸ்ரீநாத் என்ற கவிஞர் தன்னோட கவிதையில்
காசியில் இறக்கும்மனிதனுக்குஅவன்இறக்கும் தறுவாயில்
அவன் மூச்சு மேலும் கீழுமாக சிரமப்படும்போது அம்பாள்
தன்னோட முந்தானையால் விசிறி நெஞ்சைவருடிவிடுவதையும்
.தன் மடியில் அமர்த்திகொண்டு,என்றும்


காசித்துண்டி விநாயகர் தும்பிக்கையால் மூச்சுக்கு தவிக்கும்
மனிதனுக்கு மூச்சு காற்றை செலுத்தி ஆசுவாசபபடுத்துவதையும்
ப்ருங்கி அந்த மனிதனுக்கு நெற்றியில் விபூதி பூசி விடுவதையும்
சிவன் அந்த மனிதனின் கன்னத்தை மெதுவாக திருப்பி
அவன் காதில் தாரக மந்திரம் ஓதுவதையும், பாகீரதி கங்கம்மா
அவனுக்கு நெஞ்சில் ஜில் என்று தன்னோட கைவைத்து
வாயிலே நீர் விடுவதையும், சிவன் அவன் ஆத்மாவை
தன்னோட சேர்த்து முக்திகொடுப்பதையும்,, கவிஞர் ஸ்ரீநாத்
சொல்லியதை மிக அழகாக விவரித்தார்,

ஸ்ரீ க்ருஷ்ணதேவராயரின் சபையைஅலங்கரித்தவரில்ஸ்ரீநாத் கவி
ஒருவராம், அதி அற்புதமான இந்த கவிதையை கோடீஸ்வரரவ்
பண்டிதர் தெலுங்கில் அதி அற்புதமாக சொல்லி எளிமையாக
விவரித்தார், ஆனால் ராமகிருஷ்ண பரமஹமசர் தன்னோட
த்யானத்தில் ஒரு எறும்புக்கு காசியில் இதேவிதமாக
சிவன் முக்தி கொடுத்ததை பார்த்தாராம், வெள்ளையாக
சிவன் கங்கைக்கரைதனில் நின்று ஆத்மாக்களுக்கு முக்தி
கொடுப்பதை பார்த்து இருக்கிறார் என்கிறார்கள்.கோடீஸ்வரராவ்
சொன்னதுதான் இதுவும்,

No comments:

Post a Comment